ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன Monday Motivation...வைரலாகும் வீடியோ

ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன Monday Motivation...வைரலாகும் வீடியோ

ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன மண்டே மோடிவேஷன்.

ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன மண்டே மோடிவேஷன்.

Anand Mahindra Tweet | திங்கட்கிழமையில் நமக்கு புத்துணர்ச்சியும் ஊக்கமும் தர நிறைய பேர் இணையதளத்தில் பதிவுகள் இடுவது வழக்கம். அந்த வகையில் ஆனந்த் மஹிந்தராவும் நமக்கு மோட்டிவேஷனல் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பள்ளிக்காலம் தொடங்கி கல்லூரி, வேலை குடும்பம் என பல பருவங்கள் மாறினாலும் இந்த திங்கட்கிழமை மட்டும் மாறுவதேயில்லை. நம்மில் பலருக்கு திங்கட்கிழமை வந்தால் கூடவே சலிப்பும்  அசதியும் வந்துவிடும். வீக்கெண்ட் வந்துவிட்டது என நினைப்பதற்குள் திங்கட்கிழமை வந்துவிடுவதுக்கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.இப்படி விளையாட்டாக நாம் திங்கட்கிழமையை துரத்தினாலும் ஒரு வாரத்தை தொடங்கும் திங்கட்கிழமையை திட்டமிட்டு தொடங்குவது நல்ல பழக்கமாம்.

  இந்த திங்கட்கிழமையில் நமக்கு புத்துணர்ச்சியும் ஊக்கமும் தர நிறைய பேர் இணையதளத்தில் பதிவுகள் இடுவது வழக்கம். அந்த வகையில் ஆனந்த் மஹிந்தராவும் அவரது பதிவின் மூலம்  நமக்கு மோட்டிவேஷனல் அளித்துள்ளார்.'மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, டிவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். அவருடைய ட்வீட்கள் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். வீடியோக்களை பகிர்வதோடு மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் இருக்கும் நபருக்கு உதவிகள் செய்து வருவது அவர்களை ஊக்கப்படுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

  இன்று அவர் #MondayMotivation என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பறவை ஒன்று பறந்து செல்கிறது. அப்பொழுது திடீரென்று அடிக்கும் எதிர்க்காற்றை தன் சிறகு முழுவதும் விரித்து தலையை தூக்கி எதிர்க்கொள்கிறது. காற்றின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அயலாது தன் முழு சக்தியையும் பயன்படுத்தி அந்த எதிர்க்காற்றை எதிர்க்கிறது. அந்தரத்தில் அந்த பறவை செய்யும் இந்த விடாமுயற்சி காண்பதற்கே வியப்பாக உள்ளது.

  Read More : அக்கா என்பவள் எப்போதும் இன்னொரு தாய் தான்... வைரலாகும் க்யூட் வீடியோ

  இந்த வீடியோவை காண்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக ”நம் வாழ்க்கைக்கான பாடங்களை இயற்கை வழங்க தவறுவதில்லை. கடினமான காலங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? உங்கள் வேலை எதுவாக இருந்தாலும், உங்கள் சிறகுகள் பறக்கட்டும், காற்று உங்களை அடக்க நினைத்தாலும் உங்கள் தலையை நிலையாக வைத்திருங்கள், உங்கள் மனதை தெளிவாகவும், உங்கள் கண்களை கவனமாகவும் வைத்திருங்கள்” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

  இந்த ட்வீட்டை பதிவிட்ட 3 மணி நேரத்தில் சுமார் 4 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டியுள்ளது. நூறுக்கும் மேற்பட்ட கமெண்ட்டுகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரீட்வீட்டுகளையும் பெற்றுள்ளது. பலர் ”உங்கள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றி” எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அதிலும் ஒருவர் ”மஹிந்திரா உரிமையாளரின் நிலையான தன்மைக்கு உதாரணம்” என்ற கேப்ஷனுடன் மஹிந்த்ரா டிராக்டர் வேகமாக வரும் தண்ணீரை கடந்து வரும் வீடியோவை கமெண்ட்டில் பதிவிட்டுள்ளார் இது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

  இப்படி பலரும் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்வீட்டிலிருந்து மோடிவேஷனைப் பெற்று திங்கட்கிழமையை சந்திக்க தயாரகிவிட்டனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Anand Mahindra, Trending, Twitter, Viral