முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / விநாயகர் சிலையை கச்சிதமாக உருவாக்கும் சிறுவனை வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.! எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள்.!

விநாயகர் சிலையை கச்சிதமாக உருவாக்கும் சிறுவனை வியந்து பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.! எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள்.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Anand Mahindra | நாடு முழுவதும் விநாகயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள நிலையில், பல கலைஞர்கள் விநாயகர் சிலையை உருவாக்கும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன. இந்நிலையில் விநாயக பெருமான் சிலையை ஒரு சிறுவன் செய்யும் திறமை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தான் பார்க்கும் வித்தியாசமான விஷயங்கள், திறமைகளை வெளிப்படுத்தும் நபர்களின் வீடியோக்கள் உள்ளிட்டவை அடங்கிய போஸ்ட்களை ட்விட்டரில் ஷேர் செய்து தன் ஃபாலோயர்ஸ் அனைவருக்கும் தெரியப்படுத்துவார்.

நம்பமுடியாத விஷயங்களை செய்து தன் கவனத்தை ஈர்க்கும் நபர்களைப் பற்றிய பதிவுகள் உட்பட பல ரசனை மிகுந்த போஸ்ட்களை அடிக்கடி ஷேர் செய்து நெட்டிசன்களை கவருவது இவர் வழக்கம். அந்த வகையில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ள நிலையில், பல கலைஞர்கள் விநாயகர் சிலையை உருவாக்கும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் உலா வருகின்றன. இந்நிலையில் விநாயக பெருமான் சிலையை ஒரு சிறுவன் செய்யும் திறமை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்துள்ளது. சிறுவன் விநாயகர் சிலையை உருவாக்கும் அற்புத வீடியோ ஒன்றை ட்விட்டரில் ஷேர் செய்து இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

விநாயகரின் கச்சிதமான உருவத்தை ஒரு சிறுவன் களிமண்ணில் தனது பிஞ்சு கைகளால் செதுக்குவதை ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்துள்ள வீடியோ காட்டுகிறது. விநாயகரின் தும்பிக்கையை கவனமாக கையாண்டு அதை மென்மையாக்கி வடிவம் கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறான் அந்த சிறுவன். ஒரு தொழில்முறை சிற்பியை போல தனது படைப்பு திறமையை காட்டும் சிறுவனின் இந்த அழகான வீடியோவை ஷேர் செய்துள்ள ஆனந்த் மஹிந்திரா, " இந்த சிறுவனின் கை ஒரு சிறந்த கைவினைஞர் அல்லது சிற்பியைப் போல மிக லாவகமாக அதே சமயம் நேர்த்தியாக செயல்படுகிறது. இது போன்ற திறமைகளை கொண்ட குழந்தைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் ஏதேனும் பயிற்சி பெறுகிறார்களா அல்லது எதிர்காலத்தில் இந்த திறமையை விட்டுவிட வேண்டுமா.!" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் சிறுவனின் திறமை பற்றிய ஆனந்த் மஹிந்திராவின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல கலவையான எதிர்வினை கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ் மற்றும் பல ரியாக்ஷன்களை பெற்றிருந்தாலும் பல நெட்டிசன்கள் ஆனந்த் மஹிந்திராவின் போஸ்ட்டால் ஈர்க்கப்படவில்லை.

Also Read : பேரனுக்காக தாத்தா செய்த செயல்... மனதை நெகிழ வைக்கும் வீடியோ

மாறாக இந்த சிறுவன் சிலை வடிக்கும் வீடியோவைப் பாராட்டுவது கிட்டத்தட்ட குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிப்பது போல் இருப்பதாக பலர் கமெண்ட்ஸ் செய்து உள்ளனர். அதே நேரம் சிறுவனின் அபரிதமான திறமையையும் பல நெட்டிசன்கள் பாராட்டி இருக்கிறார்கள்.

தயவு செய்து இதை ஊக்குவிக்க வேண்டாம். அவர் இந்த வயதில் நல்ல கல்வியைப் பெற வேண்டும் மற்றும் பட்டப்படிப்பை முடித்த பிறகு ஒரு வேலையாக இதை கலை பணியாக கூட தொடரலாம் என ஒரு யூஸர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். இது குழந்தைத் தொழிலாளர் முறையின் கீழ் வரவில்லையா..? என்று மற்றொரு யூஸர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த சிறுவன் நிச்சயமாக தனது தந்தை அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் பயிற்சி பெறுகிறார். வளரும் போது திறமையை மேலும் வளர்த்து கொள்வார் என கூறி மற்றொரு யூஸர் உள்ளார்.

First published:

Tags: Anand Mahindra, Ganesh idols, Trending, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி, Viral Video