முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஹோட்டல் ஊழியரின் திறமை.. வீடியோவை ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

ஹோட்டல் ஊழியரின் திறமை.. வீடியோவை ஷேர் செய்த ஆனந்த் மஹிந்திரா.. வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன், தொழிலதிபரின் பாராட்டும் தாராள மனப்பான்மையை மறுமுறை உறுதிப்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சோஷியல் மீடியாக்களில் மக்கள் தங்களை ஈர்க்கக்கூடிய திறன்கள் மற்றும் தனித்துவ திறமைகளை காட்டும் வீடியோக்கள் நிறைந்துள்ளன. அன்றாட வேலைகளை செய்யும் போது மக்கள் தங்களிடம் இருக்க கூடிய சூப்பர் திறன்களை வெளிப்படுத்துவதை பார்ப்பது நமக்கு பல நேரங்களில் வியப்பானதாக இருக்கிறது.

இது போன்ற வீடியோக்கள் சாதாரண யூஸர்களை மட்டுமல்ல பெரிய தொழிலதிபர்களையும் எளிதாக கவர்கிறது. பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். எப்போதும் தனது ஃபாலோயர்ஸ்கள் மத்தியில் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமளிக்கும் பல போஸ்ட்களை அவ்வப்போது ஷேர் செய்து வருபவர். நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கும் திறமையான நபரின் வீடியோ தன் கண்ணில் பட்டால் கூட, அதனை பார்த்து வியந்து பாராட்டி உடனடியாக தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் ஆனந்த் மஹிந்திரா சமீபத்தில் ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளதுடன், தொழிலதிபரின் பாராட்டும் தாராள மனப்பான்மையை மறுமுறை உறுதிப்படுத்தி உள்ளது. தென்னிந்திய உணவகம் ஒன்றில் பணியாளர் ஒருவர் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட பிளேட்களை கையாளும் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ள தொழிலதிபர், இந்த வெயிட்டரின் திறனை பார்த்து தான் மிகவும் வியப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Read More : காதலை ஏற்க மறுத்த தோழி... ரூ.24 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த இளைஞர்!

இவரது திறன் ஒரு ஒலிம்பிக் விளையாட்டாக அங்கீகரிக்க பட வேண்டும் என்று கூறியதோடு இதை ஒலிம்பிக்கில் விளையாட்டாக சேர்த்தால் நிச்சயம் இவர் தங்க பதக்கம் வெல்ல கூடிய போட்டியாளராக இருப்பார் என்று கூறி குறிப்பிட்ட வீடியோவில் இருக்கும் வெயிட்டரை வெகுவாக பாராட்டி இருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. ஆனந்த் மஹிந்திரா ஷேர் செய்துள்ள வைரல் வீடியோவில், ஒரு சமையல் மாஸ்டர் பல தோசைகளை வேகமாக சுட்டு கொடுப்பதையும் அதை ஒரு வெயிட்டார் அருகில் நின்று ஒவ்வொரு பிளேட்டுகளாக எடுத்து வாங்குவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.

மாஸ்டர் தோசையை சுட்டு கொடுக்க கொடுக்க வெயிட்டார் பிளேட்களில் வாங்கி தன் உள்ளங்கையில் இருந்து கையின் இறுதிவரை அவற்றை அழகாக தோசையுடன் அடுக்கி கொண்டே செல்கிறார். மூன்றல்ல, நான்கல்ல மொத்தம் இப்படி 16 பிளேட் தோசைகளை கைகளில் அடுக்கி அவற்றை சூப்பராக பேலன்ஸ் செய்து மொத்த பிளேட்களையும் லாவகமாக கையாண்டு வாடிக்கையாளர்களுக்கு சூடான தோசைகளை பரிமாறுகிறார் அந்த வெயிட்டர். இந்த வீடியோவை ஷேர் செய்ததில் இருந்து சுமார் 1.4 மில்லியன் யூஸர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வைரல் வீடியோ கிளிப் யூஸர்களிடமிருந்து பலதரப்பட்ட கமெண்ட்ஸ்களை பெற்றுள்ளது. ஒரு யூஸர் குறிப்பிட்டுள்ள கமெண்டில் இந்த வெயிட்டருக்கு பிசிக்ஸ் மற்றும் தெர்மோடைனமிக்ஸ் பற்றி நல்ல புரிதல் உள்ளது. சூடான தோசை கைகளை சுட்டுவிடாமல் மிக கவனமாக வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார் என பாராட்டி உள்ளார். மற்றொரு யூஸர் இதே போல ஒரே சமயம் பல பிளேட்டுகளை கையாளும் வெளிநாட்டு நபரின் வீடீயோவை ஷேர் செய்து போட்டி எல்லா இடங்களிலும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


First published:

Tags: Trending, Viral