Home /News /trend /

இது தான் இந்தியாவிற்கு தேவை... நோட் பண்ணுங்கப்பா - வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்.!

இது தான் இந்தியாவிற்கு தேவை... நோட் பண்ணுங்கப்பா - வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்.!

Trending

Trending

Anand Mahindra | ஆனந்த் மஹிந்திராவின் பெரும்பாலான பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும் நிலையில், தற்போது பழுதான சாலையை பேட்ச் ஒர்க் செய்வது குறித்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மஹிந்திரா கார் குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா, தன்னுடைய பிஸினஸில் கவனம் செலுத்தும் அதே வேளையில் சோசியல் மீடியாவிலும் பிஸியாக இருக்கக்கூடியவர். இந்தியா மட்மில்லாது உலகில் எங்கு என்ன நடந்தாலும் அவற்றை தன்னுடைய ட்விட்டரில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவரின் பெரும்பாலான பதிவுகள் பலரின் கவனத்தை ஈர்க்கும் நிலையில், தற்போது பழுதான சாலையை பேட்ச் ஒர்க் செய்வது குறித்த வீடியோவை பதிவிட்டிருந்தார்.

அதில், “பழுதான சாலையை சரிசெய்ய மெனக்கெடாமல் ஒரு பேப்பர் போன்ற ஒன்றை ஒட்டுகின்றனர். பின்னர் கொஞ்சம் ஜல்லி போன்றவற்றை உள்ளே போட்டு சரி செய்தால், சாலைகள் குண்டு குழியுமாக தெரியவில்லை. வாகனங்கள் அனைத்தும் அசால்ட்டாக சாலையை கடந்து செல்கிறது.

இந்த வீடியோவை பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, இந்தியாவில் சாலையை சரி செய்ய வேண்டும் என்றால் பல நாள்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில், இது போன்ற இன்ஸ்டன்ட் ரோடு பேட்ச் நிச்சயம் இந்தியாவிற்கு தேவை என்று பதிவிட்டுள்ளார். மேலும் கட்டிடம் மற்றும் கட்டுமானப் பொருட்கள் நிறுவனம் இதை பின்பற்ற வேண்டும் அல்லது இந்த நிறுவனத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்ததோடு இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும் என்றும் கருத்துகளை பகிர்ந்திருந்தார்.இந்த வீடியோவைப்பார்த்த நெட்டிசன்கள், ஆமாம் நிச்சயம் மும்பையைப்போன்ற பெருநகரங்களுக்கு இது தேவை தான் எனவும், பருவமழை இல்லாத சமயங்களில் முன்னெச்சரிக்கையாக இதை பயன்படுத்தலாம் என்றார். மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவர், இந்தியாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. என்ன செய்வது? எத்தனை சொன்னாலும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என கவலையுடன் டிவிட் செய்தார். மேலும் இந்திய சாலை சீரமைக்கு என்று தீர்வே இல்லை. அந்தளவிற்கு பெரிய பள்ளங்கள் உள்ளது. இருந்தப்போதும் ஆரம்பத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ட்விட் பதிவிட்டிருந்தனர்.

Also Read : பாகுபலி ராஜமாதா போல் தனது குழந்தையை மக்களுக்கு காட்டிய கொரில்லா - வைரல் வீடியோ

மற்றொரு பயனர் இந்தியாவில் சாலைகளை அமைப்பதற்கு சிறந்த ஒப்பந்தக்காரர் நமக்கு தேவை என்பது போன்ற பல்வேறு கருத்துக்களையும் ஈமோஜிகளையும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். இதுவரை இந்த வீடியோவை 742.6 k பார்வையாளர்களைக்கண்டு ரசித்துள்ளனர். அதே சமயத்தில் 22.5 k லைக்குகளையும் பெற்று இணையத்தில் வைரலாகிறது.ஆனந்த் மஹிந்திரா டிவிட் செய்த இந்த கண்டுபிடிப்பு அமெரிக்காவை தளமாகக் கொண்ட அமெரிக்கன் ரோடு பேட்ச் நிறுவனம் தயாரித்தது. இதுக்குறித்து நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சாலையை பழுதுபார்க்கிறோம் என்றால் பல நாள்களுக்கு அச்சாலையை நம்மால் பயன்படுத்த முடியாது. ஆனால் இதைப்பயன்படுத்தும் போது நீண்ட நேரம் நமக்குத் தேவைப்படாது. சீக்கிரம் பணியை முடித்துவிடலாம் என்கின்றனர்.

Also Read : பபுள் கம்மை மென்று ரூ.67,000-க்கும் மேல் சம்பாதிக்கும் இளம்பெண் - எப்படி தெரியுமா.?

இதோடு சாலை விரிசல் மற்றும் பள்ளங்களை எளிதில் மறைக்க முடியும். இந்த சாலைத்திட்டுகள் உயர்தர நிலக்கீல், பாலிமர் மற்றும் ஜியோசிந்தடிக் கண்ணாடியிழை ஆகியவற்றின் கலவையால் செய்யப்படுகின்றன. இந்த திட்டுகள் ஒரு பிசின் பின்புறத்தைக் கொண்டுள்ளதால், அவை பழுதாகியுள்ள சாலையில் உள்ள குழிகளில் ஒட்டிக்கொள்கின்றன. மேலும் இந்த தயாரிப்பு நீண்ட காலத்திற்கு சாலையில் உள்ள விரிசல் மற்றும் பிளவிற்கு நீண்ட கால தீர்வு அளிக்கிறது என அமெரிக்க ரோடு பேட்ச் நிறுவனம் தெரிவிக்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Anand Mahindra, Trending, Viral Video

அடுத்த செய்தி