Home » News » Trend

முதலையை முழுதாக விழுங்க முயற்சிக்கும் அனகோண்டா...நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

பிரேசில் நாட்டில் முதலையை அனகோண்டா ஒன்று அப்படியே விழுங்க முயற்சிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

முதலையை முழுதாக விழுங்க முயற்சிக்கும் அனகோண்டா...நெஞ்சை பதற வைக்கும் வீடியோ
முதலையை முழுதாக விழுங்க முயற்சிக்கும் அனகோண்டா
  • Share this:
பிரேசிலில் உள்ள மனாஸ் அமேசானஸ் அருகே உள்ளது பொன்டா நெக்ரா கிராமம். இந்த கிராமத்திற்குள் கடந்த 7 ஆம் தேதி சுமார் 6 அடி நீளமுள்ள அனகோண்டா பாம்பு ஒன்று புகுந்துள்ளது. கிராமத்திற்குள் நுழைந்த பாம்பு அங்கிருந்த முதலை ஒன்றை முழுதாக அப்படியே விழுங்க முயற்சி செய்துள்ளது.

இதனை கண்ட கிராம மக்கள், முதலையை மீட்க போராடியுள்ளனர். இதற்காக அனகோண்டாவின் மேல் ஒரு கயிற்றை கட்டி இழுத்து சென்று உள்ளனர். இறுதியில் அனகோண்டா முதலையை விட்டு விட்டது.

 





இதையடுத்து இரு விலங்குகளும் வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே நெஞ்சை பத பதைக்க வைக்கும் இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
First published: August 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading