ஆப்டிகல் இல்யூஷனில் உள்ள புதிர்களை கண்டுபிடிப்பது லேசான காரியம் இல்லை. ஆழமான கவனமும் ஆர்வமும் அவசியம். அது மனதளவில் ஞபக சக்தியை அதிகரிக்கும். தற்போது ஆப்டிக்கல் இல்யூஷன் சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்து வருகின்றது. எனவே நெட்டிசன்களின் புதிர் விளையாட்டு பசிக்குச் சரியான வேலை கொடுக்கும் விதமாக விதவிதமான ஆப்டிக்கல் இல்யூஷன்கள் இடம் பெற்று வருகின்றன. மூளையைக் குழம்ப வைத்து, கண்களைக் கலங்க வைக்கும் அளவுக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷன்கள் பல உள்ளன. தற்போது அப்படிப்பட்ட ஒன்றைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
இதுவரை ஆளுமைத் திறன், மறைந்திருக்கும் உருவங்கள் மற்றும் முகங்கள், நடை, பழக்க வழக்கம் பற்றிய ஆப்டிக்கல் இல்யூஷன்களை பார்த்திருப்போம். இப்போது நுண்ணறிவு மற்றும் கண் பார்வைக்குச் சவால் விடக்கூடிய ஆப்டிக்கல் இல்யூஷ்னைக் கொண்டு வந்துள்ளோம்.
Reddit இல் பகிரப்பட்டுள்ள, இந்த கண் கட்டி வித்தை காட்டும் ஆப்டிக்கல் இல்யூஷன் உங்கள் புலனுணர்வு உணர்வைச் சோதிக்கும் மற்றும் உங்களின் நுண்ணறிவு அளவு (IQ) இன் நியாயமான அளவீட்டைக் கணக்கிடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் உங்கள் உள்ளுணர்வைச் சோதிக்கக்கூடியது என்பதால் இது மனோவியல் பகுப்பாய்வின் கீழ் வருகிறது.
ஒரு மனித மூளை பல்வேறு கோணங்களிலிருந்து பொருட்களை அல்லது படங்களைப் பார்க்கும் திறன் கொண்டது, கிடைமட்ட கோடுகளுடன் கூடிய இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் அதற்கு ஒரு சிறப்பான உதாரணமாகும். இந்த கோடு தொடர்பான ஒளியியல் மையத்தை சுற்றியுள்ள வண்ணங்கள் மற்றும் பொருள்கள் மற்றும் பிற காரணிகளைப் பற்றிய நமது விழிப்புணர்வைப் பரிசோதிக்கக் கூடியது ஆகும்.
இந்தப் படம் நன்கு அறியப்பட்ட மற்றும் நேரடியான ஆப்டிக்கல் இல்யூஷன் ஆகும். இந்த படத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் நாம் எதைப் பார்க்கிறோம் என்பதைத் தெளிவாகக் குழப்பப் பயன்படுகிறது. ஒரு நேரத்தில் கருப்பு செங்குத்து கோடுகள் அல்லது வெள்ளை செங்குத்து கோடுகள் சரியாக உள்ளனவா எனப் பார்க்க முயன்றால், நெடுவரிசைகளின் ஒழுங்கின்மையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிடைமட்ட கோடுகள் நம் கண்களுக்குக் கீழ்நோக்கி சறுக்குவது போல் தோன்றுகின்றன, இதற்குக் காரணம் நமது கண்கள் செங்குத்து கோடுகள் மீது கவனம் செலுத்துவதே ஆகும்.
கோடுகள் அனைத்தும் நேராக உள்ளன என்பதையும், மிக உயர்ந்த IQ உள்ளவர்கள் மட்டுமே அதைக் கண்டறிய முடியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?. கருப்பு மற்றும் வெள்ளைத் தொகுதிகள் சரியாகச் சீரமைக்கப்படாததால், கோடுகள் கீழ்நோக்கிச் சாய்ந்துள்ளது போல் காட்டி, இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் பார்வையாளர்களின் மூளையை ஏமாற்றுகிறது. கிடைமட்ட கோடுகள் முற்றிலும் நேராக உள்ளன, மேலும் வை கீழ்நோக்கி சாய்வாக இல்லை என்பதையும் உறுதியாகக் காட்டுகிறது. அனைத்து கோடுகளும் நேராகவும் குறைபாடற்றதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, நீங்கள் ஒரு துண்டு காகிதத்தை அல்லது ஒரு ஸ்கேலை திரையில் வைத்துப் பார்க்கலாம்.
எனவே, நீங்கள் கிடைமட்டக் கோடுகளை இணையாகக் கண்டீர்களா அல்லது இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் அவை கீழே கீழே சாய்ந்துள்ளது போல் காட்டி ஏமாற்றியதா? என்பதைக் கண்டுபிடியுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.