கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷியில் உறைந்த ஏரியில் ஆட்டம்போட்ட சர்தார்ஜீ...! வைரல் வீடியோ!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட குஷியில் உறைந்த ஏரியில் ஆட்டம்போட்ட சர்தார்ஜீ...! வைரல் வீடியோ!!

குர்தீப் பாந்தர்

COVID-19 தடுப்பூசியை போட்டுக் கொண்டதும் அதை கொண்டாடும் வகையில் நடனம் ஆடும் இவர் பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா நடனக் கலைஞர் ஆவார். கனடாவில் உறைந்த ஏரியில் நடனமாடி தனது குஷியை அவர் கொண்டாடுகிறார்.

  • Share this:
குர்தீப் பாந்தர் என்ற வெளிநாடு வாழ் இந்தியரின் ஒரு வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். தாளத்துக்கு ஏற்றவாறு மகிழ்ச்சியுடன் நடனமாடும் அவரைப் பார்க்கும் அனைவருக்கும் உற்சாகம் ஏற்படும். சரி வாருங்கள் தாமதிக்காமல் அவரின் ஹாப்பி டான்ஸ் வீடியோவை இப்போது காண்போம்.

COVID-19 தடுப்பூசியை போட்டுக் கொண்டதும் அதை கொண்டாடும் வகையில் நடனம் ஆடும் இவர் பஞ்சாபின் பாரம்பரிய நடனமான பங்க்ரா நடனக் கலைஞர் ஆவார். கனடாவில் உறைந்த ஏரியில் நடனமாடி தனது குஷியை அவர் கொண்டாடுகிறார்.



கனடாவில் வாழும் Gurdeep Pandher என்பவர் சில நாட்களுக்கு முன்பு மாடர்னா கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். அதன் பிறகு பனியால் உறைந்த ஏரிக்குச் சென்று, பங்க்ரா நடனமாடிய அந்த வீடியோவைப் சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்தார். பல நெட்டிசன்களிடமிருந்து ஆரவாரமான வரவேற்பை அந்த வீடியோ பெற்றது. வெறும் 55 விநாடிகள் கொண்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் குர்தீப் பாந்தர். அந்த வீடியோவுடன், குர்தீப் மக்களுக்கு ஒரு அழகான மற்றும் எழுச்சியூட்டும் செய்தியையும் எழுதியுள்ளார்.

அதில், ``நேற்று மாலை கோவிட் -19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் இருக்கிறேன். எனவே தான் குஷியை வெளிப்படுத்த நடனமாட நான் உறைந்த ஏரிக்குச் சென்றேன். அனைவரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்”. என்று கேப்ஷனில் எழுதியுள்ளார். இந்த வீடியோவை ரசிக்கும் பல நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளை போஸ்ட் செய்து, குர்தீப் பாந்தரை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

கனடாவின் யூகோன் நகரத்தில் (Yukon city) குர்தீப் தடுப்பூசி பெற்றுக் கொண்டார். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு COVID-19 தடுப்பூசி போட கிளினிக்குகள் திறப்பட்ட கனடாவின் முதல் நகரமும் இதுதான். கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைத்த பிறகு குர்தீப்பின் மகிழ்ச்சியான நடனம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ட்வீட் செய்த வீடியோ கிட்டத்தட்ட இரண்டு நாட்களில் 1,16,000 லைக்குகளை பெற்றுள்ளது. 2.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வீடியோவை பார்த்து ரசித்திருக்கின்றனர்.

மகிழ்ச்சி என்பதற்கு வரையறை இல்லை மேலும் மகிழ்ச்சி எப்போதும் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த வகையில் கனடாவை சேர்ந்த குர்தீப்க்கு ஏற்பட்டிருக்கும் இந்த மகிழ்ச்சி உண்மையில் பலரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Published by:Ram Sankar
First published: