Home /News /trend /

புதுக்கோட்டை ஐஏஎஸ் அதிகாரியின் செயலை வெகுவாக பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

புதுக்கோட்டை ஐஏஎஸ் அதிகாரியின் செயலை வெகுவாக பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா!

செஸ் காய்களுக்கு உயிர் கொடுத்துள்ள ஐஏஎஸ் அதிகாரி

செஸ் காய்களுக்கு உயிர் கொடுத்துள்ள ஐஏஎஸ் அதிகாரி

ஐஏஎஸ் அதிகாரியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு சதுரங்கப் பலகையில் உள்ள காய்களுக்குப் பதிலாக அந்த காய்களின் பதவியை மனித உருவில் உயிர் பெறச் செய்துள்ளார்.

    2022 இம் ஆண்டுக்கான செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்வை சிறப்பளிக்கும் விதமாக பல்வேறு செயல்களில் அரசு ஈடுபட்டு வருகிறது. அதில் ஒரு பங்காக புதுகோட்டை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சதுரங்கப் பலகையில் உள்ள காய்களுக்கு உயிர் கொடுத்துச் சிறந்த படைப்பைப் படைத்துள்ளார். அவர் காணொளியாக உருவாக்கிய படைப்பாற்றலை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    ஐஏஎஸ் அதிகாரியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருமான கவிதா ராமு சதுரங்கப் பலகையில் உள்ள காய்களுக்குப் பதிலாக அந்த காய்களின் பதவியை மனித உருவில் உயிர் பெறச் செய்துள்ளார். சதுரங்கப் பலகையில் காய்களை நகர்த்துவது போலயே உயிருள்ள காய்களும் நகர்ந்துகொண்டே நடனமாடுகின்றனர். இது தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையாகப் படைக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி ஆனந்த் மஹிந்திரா தெரிவிக்கையில் அருமையான முறையில் நடனமாக்கப்பட்ட படைப்பு. மேலும் இந்தியாவில் செஸ் கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்குக்கேற்ற உண்மைத்தன்மையுடன் உள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

    Also Read : Headlines Today | சிலிண்டர் விலை குறைப்பு முதல் ஆசிரியர்களின் வருகை பதிவு செயலி முதல்... இன்றைய முக்கிய செய்திகள்

    இந்த காணொளியின் முழு படைப்பைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் நிர்வாகத்தால் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். இந்த காணொளியைப் படைத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நடனக் கலைஞர். பரதநாட்டியம் குட்சிப்பொடி போன்ற நடனங்கள் தெரிந்தவர். 25 வருடங்களில் 700 மேடைகளில் நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளார். அவர் இந்த காணொளியில் தமிழக பாரம்பரிய கலைகளான நாட்டுப்புறக் கலை, மல்யுத்தம், சிலம்பம் போன்றவற்றைக் காட்சிப்படுத்தியுள்ளார்.



    2022 இம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் கொண்டாட்டத்தில் ஏற்கனவே A.R.ரகுமான் உருவாக்கிய பாடல், செஸ் பலகையாக மாறிய நேப்பியர் பாலம், செஸ் ஒவியங்களில் மூழ்கிய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியம் கட்டிடம் போன்றவை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022, Puthukkottai

    அடுத்த செய்தி