ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஓடும் ரயிலில் கணவனுக்கு திடீர் மாரடைப்பு : சுவாசம் தந்து உயிரை காப்பாற்றிய மனைவி! வைரல் வீடியோ

ஓடும் ரயிலில் கணவனுக்கு திடீர் மாரடைப்பு : சுவாசம் தந்து உயிரை காப்பாற்றிய மனைவி! வைரல் வீடியோ

கணவனை காப்பாற்றிய மனைவி

கணவனை காப்பாற்றிய மனைவி

போலீசார் அறிவுறுத்தலில் பேரில் 10 நிமிடங்கள் cpr முதலுதவியை வாயோடு வாய் வைத்து அவரது மனைவி தயா அளித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India

உத்தரப்பிரதேசத்தில், ரயிலில் சென்ற 70 வயது முதியவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது மனைவி போலீசார் உதவியுடன் சிபிஆர் முதலுதவி அளித்து காப்பாற்றினார்.

டெல்லியில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற ரயிலில் கேசவன்- தயா என்ற முதிய தம்பதி பயணம் செய்துள்ளனர். மதுரா அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, கேசவன் என்ற பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. வழியால் தவித்து கொண்டிருந்த கணவரை பார்த்த தயா உடனடியாக ரயில்வே அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே ரயில்வே போலீசார் ஓட்டுனரிடம் செய்து தெரிவித்து ரயிலை நிறுத்தினர். ரயில் நிலையத்தில் அவரை இறக்கி படுக்க வைத்து போலீசார் முதலுதவி அளித்தனர்.

மறதியால் மூன்று முறை லாட்டரி வாங்கிய வயதான தம்பதிக்கு அடிச்ச ஜாக்பாட்!

நடைமேடையில் கூடிய கூட்டத்தை பார்த்த ஆர்பிஎப் காவலர்கள் அசோக்குமார் மற்றும் நிரஞ்சன் சிங் ஆகியோர் அங்கு வந்தனர். அசோக்குமார் கேசவனின் உடல்நிலையின்  நிலைமையின் தீவிரத்தைக் கண்டு  CPR கொடுக்கச் சொன்னார்.

இதன் பிறகு, போலீசார் அறிவுறுத்தலில் பேரில் 10 நிமிடங்கள் cpr முதலுதவியை வாயோடு வாய் வைத்து அவரது மனைவி தயா அளித்தார். அரை மணி நேரத்துக்குப் பிறகு கேசவனுக்கு சுயநினைவு வந்தது. ஆர்பிஎஃப் வீரர்கள் ஆம்புலன்சை வரவழைத்து கேசவனை மதுராவில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய போலீசாருக்கு தயா நன்றி தெரிவித்தார். தயா முதலுதவி செய்து தனது கணவரை காப்பாற்று வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: First Aid, Uttar pradesh