Home /News /trend /

மறைந்த இசை ஜாம்பவான் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மாவுக்கு மோனோக்ரோம் கிரியேட்டிவ் மூலம் அஞ்சலி செலுத்திய Amul..

மறைந்த இசை ஜாம்பவான் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மாவுக்கு மோனோக்ரோம் கிரியேட்டிவ் மூலம் அஞ்சலி செலுத்திய Amul..

Pandit Shivkumar Sharma

Pandit Shivkumar Sharma

Pandit Shivkumar Sharma | ஒரு காலத்தில் அதிகம் அறியப்படாத இசை கருவியான சந்தூரை பிரபலப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவர் 1985-ல் அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரத்தின் கௌரவ குடியுரிமை உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த மே 10 (செவ்வாய்கிழமை) அன்று காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக இந்தியாவின் மிகவும் பிரபல மற்றும் பாரம்பரிய இசை கலைஞர்களில் ஒருவரான பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா தனது 84-வது வயதில் காலமானார்.

இவர் சாந்தூர் மேஸ்ட்ரோ (santoor maestro) என்று குறிப்பிடப்படுகிறார். santoor என்பது ஒரு நாட்டுப்புற இசைக்கருவி ஆகும். இது ஜம்மு மற்றும் காஷ்மீரை சேர்ந்த ஒரு பாரம்பரிய இசை கருவியாகும். பழங்காலத்திலிருந்தே இருக்கும் (santoor)பண்டைய சமஸ்கிருத நூல்களில் ஷத தந்திரி வீணை என்று அழைக்கப்பட்டது. santoor-ல் புகழ்பெற்ற மேஸ்ட்ரோவாக திகழ்ந்து வந்த பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா திடீரென மரணமடைந்தது இந்திய திரை உலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.

பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், ஜாவேத் அக்தர் உட்பட பல முன்னணி பிரபலங்கள் மறைந்த santoor maestro-விற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைந்த இசை ஜாம்பவானான ஷிவ்குமார் ஷர்மாவின் இறுதி சடங்கு மராட்டிய அரசின் சார்பாக, முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதனிடையே மறைந்த santoor maestro பண்டிட் ஷிவ்குமார் ஷர்மாவை கௌரவிக்கும் விதமாக, பிரபல பால் உற்பத்தி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல், தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்களில் ஒரு சிறப்பு படைப்பு ஒன்றை ஷேர் செய்தது. இசை ஜாம்பவான் பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா நினைவாக, அமுல் ஒரு ஆக்கப்பூர்வமான மோனோக்ரோம் கிரியேட்டிவ் (monochrome creative) கிராஃபிக் இமேஜ் ஒன்றை ஷேர் செய்தது. இந்த அஞ்சலி போஸ்ட்டிற்கு "பிரபல மேஸ்ட்ரோ சந்தூர் ப்ளேயருக்கு அஞ்சலி..." என்று அமுல் கேப்ஷன் கொடுத்தது.
மோனோக்ரோம் ஆர்ட் என்பது ஒரே ஒரு வண்ணம் அல்லது சாயலைப் பயன்படுத்தி உருவாக்கப்படுவது. இது ஒரு நிறத்தின் வெவ்வேறு ஷேட்ஸ்-ஐ பயன்படுத்தலாம், ஆனால் வரையறையின்படி ஒரே ஒரு அடிப்படை நிறத்தை மட்டுமே கொண்டிருக்கும். மறைந்த பண்டிட் ஷிவ்குமார் ஷர்மா ஜம்முவில் பிறந்த இசை கலைஞர் ஆவார். ஒரு காலத்தில் அதிகம் அறியப்படாத இசை கருவியான சந்தூரை பிரபலப்படுத்திய பெருமை இவரையே சாரும். இவர் 1985-ல் அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரத்தின் கௌரவ குடியுரிமை உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் ஆகியவற்றை முறையே 1991 மற்றும் 2001-ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளார் பண்டிட் ஷிவ்குமார் . இவரது மறைவை தொடர்ந்து, லட்சக்கணக்கான ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் இரங்கல் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து சாந்தூர் மேஸ்ட்ரோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Also Read : ஒவ்வொரு ஆண்டும் 12 மணி நேரம் ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, பண்டிட் ஷிவ்குமார் சர்மா தனது வீட்டை விட்டு அதிகம் வரவில்லை. அவ்வப்போது ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை பார்க்க முடிந்தது. இதனிடையே பண்டிட் ஷிவ்குமார் சர்மா கடந்த 6 மாதங்களாக சிறுநீரக நோயால் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தார். எனவே டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் ஷிவ்குமார் சர்மா திடீர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார்.
Published by:Selvi M
First published:

Tags: Amul, Trending

அடுத்த செய்தி