• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ‘கோல்டன் பாய்’ நீரஜ் சோப்ராவுக்கு ஸ்பெஷல் டூடுல் வெளியிட்ட அமுல் நிறுவனம்!

‘கோல்டன் பாய்’ நீரஜ் சோப்ராவுக்கு ஸ்பெஷல் டூடுல் வெளியிட்ட அமுல் நிறுவனம்!

‘கோல்டன் பாய்’ நீரஜ் சோப்ரா

‘கோல்டன் பாய்’ நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கப்பதக்கம் ஆகும்.

  • Share this:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தைப் பெற்றுக் கொடுத்து வரலாறு படைத்த நீரஜ் சோப்ராவைப் பாராட்டு அமுல் நிறுவனம் சூப்பரான டுடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

பால் வணிகத்தில் கொடி கட்டிப் பறக்கும் அமுல் நிறுவனம், தனது ஸ்டைலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடும் கட்டுப்பாடுகளுக்கு தொடங்கிய ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு கடைசி நாள் வரை தங்கப் பதக்கம் மட்டும் எட்டாக் கனியாகவே இருந்தது. வெள்ளி, வெண்கலம் என 6 பதங்கள் கிடைத்துவிட்ட நிலையில், தங்கப் பதக்கம் கிடைக்குமா? என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.



ஈட்டி எறிதலில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நீரஜ் சோப்ரா, 130 கோடி மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் 87.58 மீட்டர் தொலைவு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் மட்டுமல்லாது, ஒலிம்பிக் போட்டிகளிலேயே தடகளத்தில் இந்தியா கைப்பற்றும் முதல் தங்கம் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

அவருடைய வெற்றியை இந்தியாவை கொண்டாடி வரும் நிலையில், அமுல் நிறுவனம் தனது ஸ்டைலில் வாழ்த்துகளை கூறியுள்ளது. அதாவது, நீரஜ் சோப்ராவுக்கு ஸ்பெஷல் டுடூல் ஒன்றை வெளியிட்டுள்ள அமுல் நிறுவனம், அதில் கோல்டன் பாய் நீரஜூக்கு அமுல் பெண் சல்யூட் அடிக்கிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி நீரஜ் தங்கப் பதக்கத்தை வென்றவுடன், உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை அமுல் நிறுவனம் வாழ்த்தியது.



அமுல் நிறுவனத்தைப் பொறுத்த வரை நாட்டு நடப்புகளை எப்போதும் தங்களுடைய விளம்பரத்துக்காக சரியாக பயன்படுத்திக் கொள்ளும். அந்த மார்க்கெட்டிங் ஸ்கில்ஸ் வெறும் விளம்பரமாக மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் வகையில் தயாரிப்பது அமுல் நிறுவனத்திற்கு இருக்கும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஒலிம்பிக் கோல்டன் தருணங்களையும் தனதாக்கி, வீரர்களை மனதார வாழ்த்தியுள்ளது.

Also read... டிராகன் போன்ற பறக்கும் உயிரினத்தின் புதைப்படிவம் ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

ஒலிம்பிக் போட்டிகளை பொறுத்தவரை தனி நபர் பிரிவில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது தங்கப்பதக்கம் ஆகும். இதற்கு முன்பு அபினவ் பிந்திரா தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார். தடகளத்தில் 121 ஆண்டு காத்திருப்புக்குப் பின் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இதேபோல், இறகுப்பந்துப் போட்டியில் வெண்கலம் வென்ற பி.வி.சிந்து, தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். பதக்கம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வியைத் தழுவினாலும், நீரஜ் பெற்றுக்கொடுத்த வெற்றி, அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: