ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அமுல் கேரக்டருடன் நடைபோடும் ரிஷி சுனக்..! இங்கிலாந்து பிரதமரை வாழ்த்திய அமுல் நிறுவனம்.!

அமுல் கேரக்டருடன் நடைபோடும் ரிஷி சுனக்..! இங்கிலாந்து பிரதமரை வாழ்த்திய அமுல் நிறுவனம்.!

ரிஷி சுனக்

ரிஷி சுனக்

Amul Rishi Sunak | போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த ரிஷி சுனக் தான் முதலில் போர்க்கொடி தூக்கி போரிஸை ராஜினாமா செய்ய வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியில் இருந்து கடந்த ஜூலை 7ம் தேதி போரிஸ் ஜான்சன் விலகினார். இதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் 45 நாட்களில், பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்-கும் நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட்-க்கும் நேரடி போட்டி ஏற்பட்டது.

இதில் ரிஷிக்கு 193 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்ததால், பிரதமர் பதவி போட்டியில் இருந்து விலகுவதாக பென்னி மார்டண்ட் அறிவித்தார்.இதைத்தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி, மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். இந்நிலையில், ரிஷி சுனக்கை நாட்டின் 57வது பிரதமராக நியமிப்பதாக மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பிரிட்டனின் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கிற்கு உலகம் முழுவதிலுமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் அமுல் நிறுவனமும் அவரை பாராட்டும் விதமாக சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. அமுல் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அந்த சிறப்பு டூடுளில் அமுலின் ஆஸ்தான கேரக்டருடன் ரிஷி சுனக் லண்டன் நகரத்தில் நடந்து செல்வதுபோல் வரையப்பட்டுள்ளது. மேலும் அந்த டூடுளில் "ரிஷி சுனுக். பிரைம் மகான்" என்று எழுதப்பட்டுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் அனைத்து எழுத்துக்களும் சிவப்பு நிறத்தில் இருந்தாலும் "யுகே பிஎம்" எனும் எழுத்துக்களை நீல நிறம் கொண்டு ஹைலைட் செய்யப்பட்டுள்ளது தான்.


'பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமரை வரவேற்கிறேன்' என்று தலைப்பிட்டு அமுல் பகிர்ந்துள்ள இந்த பதிவிற்கு இதுவரை 7,000 க்கும் மேற்பட்ட லைக்குள் குவிந்துள்ளது. நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ள இந்த பதிவை பலர் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பயனர் ஒருவர் "அற்புதம்! அமுல் கா ஜவாப் நஹின்! (அமுல் என்பதற்கு வார்த்தைகள் இல்லை) என்றும் மற்றொருவர், "அற்புதம்!" என்றும் கமெண்ட் செய்துள்ளனர், மேலும் சிலர் சிரிப்பு எமோஜிகளையும், கைதட்டி எமோஜிகளையும் பதிவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Amul, England, Rishi Sunak, Trending