Home » News » Trend

விளையாடுவதற்கு இதுவா நேரம்... இந்திய அளவில் ட்ரெண்டான "Uninstall Whatsapp"... விமர்சிக்கப்படும் அமிதாப் பச்சன்...!

ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் , கொரோனா குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு பின்னர் டெலீட் செய்தார்.

விளையாடுவதற்கு இதுவா நேரம்... இந்திய அளவில் ட்ரெண்டான
சிக்கலில் சிக்கிய அமிதாப் பச்சன் !
  • Share this:
கொரோனா வைரஸ் குறித்து பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக மெகா சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் அமிதா பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில்.

This the first Time in english literature question and answer both are same


Q : who declared corona as a pandemic?
A : WHO declared corona as a pandemic? என பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் , கேலி செய்தும் வருகின்றனர். இது தொடர்பாக இந்திய அளவில் "Uninstall Whatsapp" என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் , கொரோனா குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு பின்னர் டெலீட் செய்தார். கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி கைதட்டுமாறு கூறியதை நடிகர் அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

அமாவாசை அன்று கெட்ட சக்திகள் மற்றும் வைரஸின் வீரியம் அதிகரிக்கும் அதற்கு எதிராகத்தான் தான் அனைவரும் கைதட்டுதல், ஒலி எழுப்புதல் போன்றவற்றை செய்து வைரஸை விரட்ட வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க அமிதாப் பச்சன் அந்த ட்வீட்டை நீக்கினார். தற்போது மீண்டும் நடிகர் அமிதாப்பச்சன் பதிவிட்ட ஒரு ட்வீட் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 









First published: April 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading