ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

எனக்கு 60 அவருக்கு 30.. பழங்குடியின இளைஞருடன் அமெரிக்க பெண்ணுக்கு மலர்ந்த காதல்..!

அமெரிக்க பெண்மணி

அமெரிக்க பெண்மணி

Deborah Babu and Saitoty Babu | தன்னை விட 30 வயது இளைய ஆணை அமெரிக்காவில் இருக்கும் பெண்மணி திருமணம் செய்து கொள்ள தன் நாட்டையே துறந்து இருக்கிறார் என்பது வைரலாகி இருக்கிறது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காதலுக்காக என்னவெல்லாம் செய்வார்கள் என்பதைப் பற்றி படிக்கும் பொழுது வேடிக்கையாக இருக்கும். காதலுக்கு ஜாதி மதம் இல்லை, கண்ணில்லை, வசதி பார்த்து காதல் வராது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஒரு சிலரின் காதல் கதைகளை கேட்கும் போது, ஆம், இவையெல்லாம் உண்மை தான் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் இந்த அமெரிக்க பெண்மணியின் காதலைப்பற்றி கேட்டால் கொஞ்சம் வியப்பாகவும், இதெல்லாம் நிஜமாகத்தான் நடக்கிறதா என்று சிந்திக்கவும் வைக்கும். அமெரிக்காவில் வசித்து வரும் இந்த பெண்மணி தன்னுடைய காதலனை திருமணம் செய்துகொள்வதற்காக தன் நாட்டைத் துறந்து ஆப்பிரிக்காவிற்கு சென்றுள்ளார்! இதில் மிகவும் முக்கியமான விஷயம், காதலன் 30 வயது இளையவர் என்பது தான்!

டெபோரா பாபு என்ற பெண்மணி அமெரிக்காவில் உள்ள காலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவருடைய காதலனான சைட்டோட்டி பாபு, ஆப்பிரிக்க நாட்டின் மாசாய் என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் இவருக்கும் இவருடைய காதலனுக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது. அதாவது டெபோராவின் காதலன், தற்போது காதல் கணவன், 30 வயது இளையவர் என்பதுதான் இதில் மிகப் பெரிய ட்விஸ்ட்!

இளம் வயது பெண்ணை நடுத்தர வயதானவர் திருமணம் செய்து கொண்டுள்ளார், 20 வயது வித்தியாசத்தில் காதல், இளம் நடிகையை மனம் முடித்தார் முதியவர் என்று ஆண் வயது அதிகமாகவும் பெண்ணின் வயது குறைவாகவும் திருமணம் மற்றும் காதல் திருமணம் செய்து கொள்வது பற்றிய செய்திகள்தான் வைரலாகும். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக பெண்ணை விட 30 வயது இளைய ஆணை அமெரிக்காவில் இருக்கும் பெண்மணி திருமணம் செய்து கொள்ள தன் நாட்டையே துறந்து இருக்கிறார் என்பது வைரலாகி இருக்கிறது.

ஆப்பிரிக்க கடற்கரையில் மலர்ந்த காதல்

டெபோரா மற்றும் சைட்டோட்டியின் காதல் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. டெபோரா 2017 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவிற்கு தன்னுடைய மகளுடன் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அங்கு தான் முதல் முறையாக சைட்டோட்டி பாபுவை சந்தித்திருக்கிறார். வழக்கமாக காதலர்களுக்கு மழை, இயற்கை, கடல், மாலை நேரம் இவையெல்லாம் உற்சாகத்தை கொடுக்கும். அதே போலத்தான் தான்சானியாவில் இருக்கும் சன்ஸிபார் பார் என்ற கடற்கரையில் இவர் சைட்டோட்டியை முதல்முறையாக சந்தித்திருக்கிறார்.

Also Read : 18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்... அதுவும் லவ் மேரேஜ்

அம்மாவும் மகளும் கடற்கரையில் உலா வந்த போது, மாசாய் பழங்குடியின மக்களை சந்தித்து இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் 30 வயதான சைட்டோட்டி பாபு. அவர் கலைபொருட்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். டெபோராவி சைட்டோட்டியிடம் எதுவும் வாங்கவில்லை என்றாலும், இருவரும் செல்பி எடுதுக்கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து சாட் செய்து வந்தனர்.

சாட்டிங், நட்பு, காதல் மற்றும் குழந்தைகளின் சம்மதம்

சாதாரண ஒரு நபராக, அறிமுகமாகிய சைட்டோட்டி பாபு மற்றும் ஒரு வெளிநாட்டு சுற்றுலாவாசியான டெபோராவிற்கு இடையே அழகான நட்பு மலர்ந்தது. ஆப்பிரிக்காவில், இன்னொரு பகுதிக்கு சுற்றுலா செல்லும் பொழுது சைட்டோட்டியும் உடன் சென்றிருக்கிறார். பிரியும் நேரத்தில் காதல் புரியும் என்பது உண்மை என்பதை இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

சுற்றுலா முடிந்த பிறகு மீண்டும் அமெரிக்காவிற்கு டெபோரா திரும்பிச் செல்லும் நேரத்தில், சைட்டோட்டி பாபு டெபோராவிடம் தனது காதலைத் தெரிவித்து, திருமணம் செய்து கொள்ள விருப்பம் என்றும் தெரிவித்திருக்கிறார். அதற்கு டெபோராவின் பதில் என்ன என்பதையும் எதிர்பார்த்திருக்கிறார்.

Also Read : பாம்புக்கு முத்தம் கொடுத்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்.. வைரல் வீடியோ.!

இதுவரை, இது வழக்கமான காதல் கதையாகத்தான் தெரியும். புதிய நாட்டிற்கு சுற்றுலா செல்லும் பொழுது அங்கே ஒரு நபர் அறிமுகமாகி அவரை பிடித்து போய் காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான் இயல்புதான். ஆனால் டெபோரா மற்றும் சைடோட்டியின் காதல் கதையில் இவர்களுடைய வயது வித்தியாசம்தான் குறிப்பிடத்தக்கது! சைட்டோட்டிக்கு 30 வயது டெபோராவின் வயது 60!

வயதை பொருட்படுத்தவில்லை என்று சைட்டோட்டி வலியுறுத்தி இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாத டெபோரா விழித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரின் குழந்தைகள் அவரை உற்சாகப்படுத்தியிருக்கிறார். அம்மா எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு மறுப்பு தெரிவிக்க போவதில்லை என்பதை அவர்கள் குழந்தைகள் உறுதி செய்துள்ளனர். ஆனால், டெபோரா எதுவும் கூறாமல் அமெரிக்காவுக்கு திரும்பி விட்டார்.

Also Read : மேலாடையின்றி மேடைக்கு வந்த பெண்.. வெறும் ஸ்பிரே தான் ஆடையே.. இணையத்தை வியப்பில் ஆழ்த்திய ஃபேஷன் ஷோ!

காதலை உணர்ந்த டெபோரா, காலிஃபோர்னியாவில் இருந்து மீண்டும் டான்சானியாவுக்கு சென்றிருக்கிறார். அப்போது, மீண்டும் சைட்டோட்டி பாபு திருமணம் செய்ய கோரியிருக்கிறார். டெபோரா திருமணத்துக்கு சம்மதித்து, 2018 ஆம் ஆண்டே மாசாய் பழங்குடியின முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது. இந்த ஆண்டு ஜுலை மாதம், இருவரும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

டெபோரா தனது பெயரை, மாசாய் இனப்படி நாஷிபாய் என்று மாற்றியிருக்கிறார். அது மட்டுமில்லாமல், டான்சானியாவில், அதாவது ஆப்பிரிக்காவில் சைட்டோட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

தெபோரா எப்படி சைட்டோட்டியைத் திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்தார் என்ற கேள்விக்கு பிர்மிங்கம் மெயிலுக்கு அளித்த பேட்டியில், “என்னை விட இவ்வளவு வயது குறைவான ஒரு நபரை, அதுவும் இவ்வளவு ஸ்மார்ட் ஆன ஒரு நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை. இவரைப்போல அன்பான, கனிவான அக்கறையாக இருக்கும் நபரை நான் இதுவரை சந்தித்ததே இல்லை.

இவர் என்னை முதலில் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டவுடன், ஏதாவது பைத்தியம் பிடித்திருக்கிறதா என்றுதான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னுடைய குழந்தைகளும், குடும்பத்தினரும் சரி வயது வித்தியாசத்தை பார்க்காமல், எனக்கு, மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்ன தேவை என்பதை யோசித்து அதன்படி முடிவெடுக்க சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்கள். டான்சானியாவில் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது ஆனால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Also Read : தன் செலவுகளை கவனித்துக் கொள்ள ஆண் நண்பரை நியமித்த இளம்பெண் - இறுதியில் நடந்த ட்வீஸ்ட்

வெளிநாட்டு நபரை திருமணம் செய்து கொண்டாலே அது அவர்கள் வெளிநாட்டில் வாழ்வதற்கான ஒரு குறுக்கு வழியாகத்தான் இப்போதுவரை பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர், காலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு வயது முதிர்ந்த பெண்மணியை திருமணம் செய்து கொண்டது பல விதங்களிலும் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கும், டெபோரா மிகவும் தெளிவாக பதில் அளித்திருக்கிறார். கலிபோர்னியாவில் இருப்பதால் கிரீன் கார்டுக்காக தான் சைட்டோட்டி பாபு டெபோராவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது மறுத்துள்ளார். சைட்டோட்டிக்கு உண்மையிலேயே அமெரிக்காவில் வந்து இருப்பதற்குக் கூட விருப்பமில்லை என்பது தனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

கவிஞர்கள் தங்கள் காதலி பற்றி கவிதை எழுதுவது போல, சைட்டோட்டி தன்னுடைய மனைவி பற்றி மிக அழகாக “முதல் முறை தெபோராவை பார்த்தபோது ஒரு தேவதையைப் பார்த்தது போல இருந்தது. அவர் என்னைப் பார்த்து சிரித்தவுடன் நான் உருகிப் போனேன். அது மட்டுமில்லாமல் மிகவும் அழகாக இருந்தார், அன்பாகவும் இருந்தார். நான் தெபோராவை திருமணம் செய்து கொண்டதில் மிகவும் பெருமை அடைகிறேன். ஒரு சிலர் எங்களுடைய வயது விஷயம் வித்தியாசத்தை பற்றி எதிர்மறையாக கிண்டலாக பேசுவது மனம் வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் வயது என்பது ஒரு விஷயமே இல்லை. நான் என்னுடைய மனைவியை மிகவும் நேசிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Published by:Selvi M
First published:

Tags: Africa, California, Love marriage, Trending