பலூன் ஊதுவது என்பது இயல்பானது என்றாலும் பலூன்கள் ஊதுவதன் மூலம் ஒரு நபர் செய்துள்ள சாதனை கின்னஸ் உலக சாதனையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலூன் ஊதி கின்னஸ் ரெக்கார்ட் செய்துள்ள நபரின் திறமையைக் கண்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அமெரிக்காவில் டேவிட் ரஷ் என்ற நபர் தனது மூக்கை பயன்படுத்தி 60 வினாடிகளில் 10 பலூன்களை ஊதி உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் இடாஹோ-வை (Idaho) சேர்ந்த பிரபல கின்னஸ் உலக சாதனையாளரான டேவிட் ரஷ், தனது அற்புதமான சாதனை எண்ணிக்கையில் 60 வினாடிகளுக்குள் 10 பலூன்களை மூக்கால் ஊதி மேலும் ஒரு சாதனையைச் சேர்த்துள்ளார்.
இது தொடர்பாக டேவிட் ரஷ் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு முன்னர் கடந்த 2016-ல் அஷ்ரிதா ஃபர்மன் (Esherita Furman) என்ற நபர் ஒரு நிமிடத்தில் 9 பலூன்களை மூக்கால் ஊதியதே சாதனையாக இருந்தது. அந்த நபரின் உலக சாதனையை தற்போது முறியடித்து உள்ளார் டேவிட் ரஷ். இந்த சாதனையை முறியடிப்பதற்கு முன்பு பல்வேறு முறை மூக்கால் பலூன்களை ஊதும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டதாக வீடியோவில் கூறி இருக்கிறார். நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, டேவிட் ரஷ் சில ஆண்டுகளுக்கு முன்பே தனது மூக்கின் மூலம் balloon inflation world record-ஐ உருவாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
Also Read : நடிகை நித்யா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
ஆனால் குளிர், ஒவ்வாமை மற்றும் பிற உடல்நலக் காரணிகள் முந்தைய 9 பலூன்களின் சாதனையை முறியடிக்க விடாமல் தடுத்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது கின்னஸ் உலக சாதனையை முறியடித்து உள்ளார் டேவிட் ரஷ். கின்னஸ் விதிகளின்படி பலூன்களை மூக்கால் ஊதுவதோடு காற்று வெளியேறி விடாமல் கட்டி முடிச்சு போட வேண்டும் என்பதால் இந்த சவால் மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும் டேவிட் ரஷ் இதில் வெற்றி அடைந்துள்ளார்.
டேவிட் ரஷ் உலக சாதனையை முறியடிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே உலகின் அதிவேக ஜக்லர், உலகின் மிக மெதுவான ஜக்லர் என பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரர் அவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Guinness, Viral Video