ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உள்ளே நோயாளி.. நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. 12 கிமீ தள்ளி டோவ் செய்த இருசக்கர வாகன ஓட்டுநர்கள்!

உள்ளே நோயாளி.. நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்.. 12 கிமீ தள்ளி டோவ் செய்த இருசக்கர வாகன ஓட்டுநர்கள்!

நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்..12 கிமீ தள்ளிச்சென்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகள்

நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ்..12 கிமீ தள்ளிச்சென்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகள்

வீடியோவை வெளியிட்ட பாஜகவின் தஜிந்தர் சிங் பக்கா, இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ஆம்புலன்ஸை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

எவ்வளவு நகரமயமாக்கல், தொழில்நுட்ப வளர்ச்சி, மாற்றங்கள் வந்தாலும் மனித நேயம் என்றும் குறைவதில்லை என்பதைக் காட்ட  அவ்வப்போது ஏதேனும் ஒரு சம்பவம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. உயிர்களுக்கு கொடுக்கப்படும் பாதிப்பு என்பது இன்றும் தொடர்கிறது. பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய வைக்கும்  சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி ஹரி நகரில் உள்ள DDU மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைய உடனடி சிகிச்சைக்காக DDU மருத்துவமனையிலிருந்து RML மருத்துவமனைக்கு அவரை மாற்ற திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி RML  மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டுள்ளது.  RML மருத்துவமனை செல்லும்போது நடுவழியில் ஆம்புலன்ஸ் பழுதடைந்துள்ளது.  உயிருக்கு போராடும் நோயாளியுடன் இரவு நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஓட்டுநர் தவித்துள்ளார்.

இந்த நிலையைக் கண்ட இரண்டு பேர் ஆபத்தான நோயாளியுடன் உள்ளே ஆம்புலன்ஸை இருசக்கர வாகனத்தில் இருந்து தள்ளிகொண்டு சென்றனர். வீடியோவை வெளியிட்ட பாஜகவின் தஜிந்தர் சிங் பக்கா, இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் ஆம்புலன்ஸை சுமார் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றதாக குறிப்பிட்டார்.

அவர்கள் ஆம்புலன்ஸை தள்ளிச்செல்லும்  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த இரண்டு வாகன ஓட்டுனர்களுக்கும்  பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

First published:

Tags: Ambulance, Delhi