ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உலகில் அழகான மற்றும் கச்சிதமாக முகம் கொண்டவர் இவர் தானாம்! ஆய்வுகள் முடிவு

உலகில் அழகான மற்றும் கச்சிதமாக முகம் கொண்டவர் இவர் தானாம்! ஆய்வுகள் முடிவு

ஆம்பர் ஹெர்ட்

ஆம்பர் ஹெர்ட்

விவாகரத்து வழக்கு ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து, வழக்கு ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பான நிலையில், டிசி காமிக்ஸின் நாயகி பற்றிய பழைய செய்தி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

அக்வாமேன் திரைப்படத்தின் மெரா என்றால் எளிதில் தெரிந்து கொள்ளக்கூடிய நடிகை ஆம்பர் ஹெர்ட். கடந்த சில மாதங்களாக உலகத்தை பரபரப்பாக வைத்த நபர்களில் ஒருவர் என்றே கூறலாம். நடிகர் ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட்டின் வழக்கு உலகையே ஸ்தம்பிக்க வைத்து, மூலை முடுக்கெல்லாம் பரவியது. யார் மீது தவறு என்பது மிகப்பெரிய விவாதத்தை எழுப்பியது.

விவாகரத்து வழக்கு ஒவ்வொரு நாளும் சூடுபிடித்து, வழக்கு ஜானி டெப்பிற்கு சாதகமாக தீர்ப்பான நிலையில், டிசி காமிக்ஸின் நாயகி பற்றிய பழைய செய்தி ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு கட்டுரையில், உலகில் கச்சிதமான முகம் கொண்டவர், ஆம்பர் ஹெர்ட் தான் என்று கூறப்பட்டிருந்தது.

லண்டனில் அட்வான்ஸ்டு ஃபேஷியல் காஸ்மெட்டிக் & பிளாஸ்டிக் சர்ஜரி சென்டரை நடத்தும் காஸ்மெட்டிக் மருத்துவர் ஜூலியன் டி சில்வா, அமெரிக்க பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கையில், அக்வாமேன் நடிகை ஆம்பர் ஹெர்ட் உலகின் கச்சிதமாக முகம் கொண்டவர் என்று கூறியுள்ளார். பண்டைய காலத்தில் அங்க லட்சணம், சாமுத்ரிகா லட்சணம் உள்ளிட்ட ஒரு நபரின் அழகு, தோற்றம், குணநலன் ஆகியவைப் பற்றி பல்வேறு அளவீடுகள் உள்ளன.

அந்த வகையில், கிரேக் கோல்டன் ரேஷியோ Phi இன் படி, உலகிலேயே ஆம்பர் ஹெர்ட்டுக்கு மட்டும் தான் சரியான அளவில் கச்சிதமான முகம் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணரின் குழு ஒரு கோல்டன் ரேஷியோ Phi அடிப்படையில் அளவிட ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளது. அதன் படி, 91.85% ஆம்பரின் முகம் பொருந்தியுள்ளது.

Also see... இந்த படத்தில் உள்ள மனிதர்களில் யார் உயரமானவர் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

கோல்டன் Phi ரேஷியோ என்பது ஒரு கணக்கு ரேஷியோ. இயற்கையாகவே இந்த ரேஷியோ அழகாகத் தெரியும் பொருட்களில் காணப்படும். இந்த மேஜிக் ரேஷியோ என்பது 1:1.1618 ஆகும். இந்த விகிதத்தின் அடிப்படையில், மூக்குக்கும் மேலுதடுக்கும் உள்ள ரேஷியோ உதடுக்கும் முகவாய்க்கும் இடையில் உள்ள இடைவெளியை விட குறைவாக இருக்கும். ஒரு நபரின் முகத்தில் இருக்கும் உறுப்புகளின் இடைவெளியை அளந்து, இந்த Phi ஃபார்முலாவில் பொருத்தினால், முகத்தின் ரேஷியோ தெரிந்துவிடும் என்று விளக்கியுள்ளார்.

இந்த மருத்துவரின் குழு, ஆம்பர் ஹெர்டின் முகத்தை, கண்கள், காது, வாய் என்று 12 முக்கியப் புள்ளிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தனர். ஆம்பர் ஹெர்டின் முக அளவீடுக்கு நெருக்கமாக அடுத்த புள்ளிகளைப் பெற்றவர்கள், கிம் கர்தாஷியன், கேட் மாஸ் மற்றும் கெண்டல் ஜென்னர் என்று கூறினார்கள்.

பின்னர், 2018 ஆம் ஆண்டில், தி வாஷிங்டன் பஸ்ட்‘குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலம்’ என்று ஹெர்டை வெளிப்படுத்தியிருந்தது. ஆறு வார நீதிமன்ற டிரையலுக்குப் பிறகு, ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக தீர்ப்பு வழங்கபப்ட்டது.

First published:

Tags: Viral