முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... தள்ளுபடி போக வெறும் ரூ.26,000... ஷாக் கொடுத்த அமேசான்

பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... தள்ளுபடி போக வெறும் ரூ.26,000... ஷாக் கொடுத்த அமேசான்

பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... ஷாக் கொடுத்த அமேசான்

பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.36,000... ஷாக் கொடுத்த அமேசான்

அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை வெறும் டெலிவரி நிறுவனங்கள் மட்டுமே இவை விற்பனையாளர்

  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் கொரோனாவுக்கு பிறகு அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களின் விற்பனை படுஜோராக அதிகரித்துள்ளது. குண்டூசி முதல் ஐபோன் வரை எல்லாம் உட்கார்ந்த இடத்திலேயே இலவச டெலிவரியாக கிடைப்பதால், மக்களும் ஆன்லைன் மூலமாக பொருட்களை ஆர்டர் செய்து வாங்க ஆரம்பித்துள்ளனர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள், கண்ணை கவரும் போட்டோஸ், அசத்தலான ஆஃபர்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆன்லைன் தளங்களும் வாடிக்கையாளர்களை எப்படியாவது தங்களது பொருட்களை வாங்க வைத்து விடுகின்றன.

முன்பெல்லாம் ஆப்பிள் ஐபோனுக்கு பதிலாக செங்கல், காஸ்ட்லி ஹெட்போனுக்கு பதிலாக கடலை மிட்டாய் என ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு ஒரு பொருளை பார்சலில் வைத்து அனுப்பும் சம்பவம் அரங்கேறி வந்தது. இப்போது ஆன்லைன் தளங்களில் மதிப்பே இல்லாத சாதாரண பொருட்களுக்கு ஆயிரக்கணக்கில் விலையை போட்டு அதிரவைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அப்படி நெட்டிசன் ஒருவர் அமேசான் ப்ரைம் தளத்தில் இருந்து பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. நாம் தினமும் குளியல் அறையில் பயன்படுத்தும் பக்கெட்டின் விலை சுமார் 25,999 ரூபாய் என அமேசான் ப்ரைம் தளத்தில் விளம்பர செய்யப்பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த வாளியின் எம்ஆர்பி 35,900 ரூபாயாம், 28 சதவீத தள்ளுபடியை சேர்த்து 25,999 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுவதாக தம்பட்டம் வேறு அடித்துள்ளனர்.

Also Read : ஏன் நாய்கள் எப்போதும் கம்பங்கள், கார் டயர்களில் சிறுநீர் கழிக்கின்றன?

ஆறு பக்கெட் அடங்கிய செட்டாக கிடைக்குமாம், அதன் விலை 25,999 ரூபாய் மட்டுமே என விளம்பரப்படுத்தி காண்போரை கடுப்பாக்கியுள்ளது அமேசான் தளம். நாம் சாதாரணமாக கடைகளில் வாங்கும் பிளாஸ்டிக் பக்கெட்டுகளின் விலை வெறும் 100, 200 ரூபாய் தானே, இதுக்கு மட்டும் ஏன் இவ்வளவு விலை என விசாரித்த போது தான் ஒரு காரணம் தெரியவந்துள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை வெறும் டெலிவரி நிறுவனங்கள் மட்டுமே இவை விற்பனையாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே வெறும் டெலிவரி செய்யும் வேலை மட்டுமே அந்த நிறுவனங்களுடையது. பொருட்களின் போட்டோவையும், விலையையும் பதிவிட்ட விற்பனையாளர் தவறுதலாக வேறு ஏதோ ஒரு பொருளுக்கு பதிலாக இதனை பதிவிட்டு, அந்த பொருளுக்கான விலையை குறிப்பிட்டிருக்கலாம். இருப்பினும் இந்த பிளாஸ்டிக் பக்கெட்டின் போட்டோ இணையத்தில் தீயாய் பரவி, நெட்டிசன்களிடம் கமெண்ட்களை குவித்து வருகிறது.

விவேக் ராஜூ என்ற நபர் தான் இந்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “இதை அமேசான் ஆன்லைன் தளத்தில் கண்டுபிடித்தேன். இதை என்ன செய்வது என்று தெரியவில்லை” என பதிவிட்டுள்ளார். “பணவீக்கம் இப்படியே அதிகரித்துக்கொண்டே சென்றால் நாளாடைவில் படத்தில் இருப்பது உண்மையாக கூட மாறலாம்” என்றும், “இந்த பாக்கெட் தனக்கு தானே தினமும் குடிநீரை நிரப்பிக்கொள்ளும்” என்றும் காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர் .

First published:

Tags: Amazon