Home /News /trend /

“இந்த திறமைகள் இருந்தால் வேலைக்கு அப்ளே செய்யுங்கள் - “1994ல் அமேசான் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு செய்தி வைரல்!

“இந்த திறமைகள் இருந்தால் வேலைக்கு அப்ளே செய்யுங்கள் - “1994ல் அமேசான் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு செய்தி வைரல்!

 ஜெப் பெசோஸ்.

ஜெப் பெசோஸ்.

Amazon | அமேசான் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை முதன் முதலாக 1994 ல் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சிக்கலான விஷயங்களையும் எளிதில் கையாளும் திறன் உள்ளவர்கள் எங்களது நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த 1994 ல் அமேசன் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் வெளியிட்ட முதல் வேலைவாய்ப்பு செய்தியொன்று இணையத்தில் வைரலாகிறது..

    இன்றைக்கு மளிகைப் பொருள்கள் முதல் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஆடைகள், கெஜட்ஸ் போன்ற அனைத்துப் பொருள்களையும் யாரும் கடைகளுக்குச் சென்று நேரடியாக வாங்கும் பழக்கம் குறைந்து விட்டது. ஸ்மார்ட்போன் இருந்தால் நொடியில் நமக்குப் பிடித்தமான பொருள்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து நம் வீட்டிலேயே பெற்றுவிடலாம். அந்தளவிற்கு பிளிப்கார்ட், மீசோ, மிந்ரா போன்ற பல்வேறு இ.காமர்ஸ் தளங்கள் மக்களிடம் விரிவடைந்துள்ளது. இந்த வரிசையில் உலகளவில் முதல் இடம் வகித்துள்ளது அமேசான் நிறுவனம்

    இப்படி மக்களிடம் பிரபலமடைந்துள்ள இந்த இ.காமர்ஸ் தளத்தை உருவாக்குவதற்காக பல வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருக்கிறார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ். முன்னதாக தான் பணியாற்றிய நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்த இவர், இ.காமர்ஸ் தளத்தைத் தொடங்கினார். பின்னர் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை முதன் முதலாக 1994 ல் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    Read More : ஒரு கால் இல்லை.. ஊன்றுகாலோடு சொந்த காலில் உழைக்கும் நபர் - வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!


    ஜெப் பெசோஸ் கொடுத்த வேலைவாய்ப்பு விளம்பரத்தில், எங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர விரும்புவோர் சிக்கலான அமைப்புகளை திறமையாக கையாள்பவராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். இதோடு கணினி அறிவியலில் BS, MS அல்லது PhD பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதோடு சிறந்த தகவல் தொடர்பு திறன் அவசியம் என்றும், இணைய சேவையகங்கள் மற்றும் HTML தெரிந்திருப்பது உதவியாக இருக்கும் என்று முதல் வேலைவாய்ப்பு செய்தியில் தெரிவித்திருந்தார்.

    இந்த பழைய வேலைவாய்ப்பு செய்தி தான் இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பல கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக “1994ல் ஸ்டார்ட் அப் கம்பெனி என்பதால் வேலைக்கு சேர அச்சமாக இருந்தது என்றும் இதே மனநிலையில் எத்தனை C,C++ முடித்தவர்கள் மிஸ் செய்திருப்பார்கள் என பதிவிட்டுள்ளனர். இன்றைக்கு அமேசானில் பணிபுரிய வேண்டும் ஆசை எத்தனை பேருக்கு உள்ளது என்பது போன்ற கருத்துக்களைப் பதிவிட்டு வரும் நிலையில், இந்த வேலைவாய்ப்பு குறித்த பதிவிற்கு பல லைக்குகள் குவிந்து வருகிறது.

    ஜெஃப் பெசோஸ் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம்


    கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜெப் பெசோஸ் இந்த விளம்பரத்தைக் கொடுக்கும் போது, Awake.com," "Browse.com அல்லது "Relentless.com” என்ற பெயர்களை பரிசீலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தான் அமேசான் என பெயரிட்டுள்ளார். இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் வெளியான ஒரு ஆண்டிற்குள் அமேசான் நிறுவனம் ஆன்லைனில் புத்தகங்களை விற்பனை செய்ய தொடங்கியது. பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு உலகளவில் முதலிடம் பிடித்துள்ள இ.காமர்ஸ் தளமாக விரிவடைந்துள்ளது.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Amazon, Trending

    அடுத்த செய்தி