5 வயது முதலே விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்து வருகிறது என கூறும் உலகின் 2ம் பெரும் கோடீஸ்வரான ஜெஃப் பெசோஸ், அடுத்த மாதத்தில் தனது கனவை நிஜமாக்க இருக்கிறார். ஆம் விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலாவாக அழைத்துச் செல்லவதற்காக அவர் உருவாக்கியிருக்கும் Blue Origin நிறுவனம் ஜெஃப் பெசோஸையும், அவருடைய சகோதரரான மார்க்கையும் ஜூலை 20ம் தேதி விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது.
மேலும் கூடுதலாக அவருடன் ஒருவர் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டு அதன்கான ஏலம் கடந்த ஜூன் 12ம் தேதி நடைபெற்றது. இதில் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏலம் கேட்டு ஜெஃப் பெசோஸுடன் மேலும் ஒரு நபர் பயணிக்க இருக்கிறார். ஆனால் அவர் யார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.
முதல் சுற்று ஏலம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் சுற்று ஆன்லைன் ஏலம் நடைபெற்று வருகிறது. இதுவரை 159 நாடுகளைச் சேர்ந்த 7,500க்கும் மேற்பட்டோர் விண்வெளி டிக்கெட் ஏலத்தில் பங்குகொண்டிருப்பதாக Blue Origin தெரிவித்துள்ளது.
பெசோஸ் பயணிக்க இருக்கும் விண்கலம் எது?
பெசோஸ் எதற்காக விண்வெளிக்கு செல்ல வேண்டும் என முதலில் கேள்வி எழலாம். சும்மா ஒரு சுற்றுலாவுக்காக என்பதே பதிலாக இருக்க முடியும். விண்வெளியில் இருந்து பூமிப்பந்தை பார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம், இனி அதனை பொதுமக்களுக்கும் சாத்தியமாக்கித் தரும் வகையில் தான் Blue Origin நிறுவனத்தை ஜெஃப் பெசோஸ் தொடங்கியிருக்க வேண்டும்.
சுற்றுலா நோக்கத்திற்காக விண்வெளிக்கு பயணமாக இருக்கும் முதல் விண்கலத்தின் பெயர் New Shepard. ராக்கெட் மற்றும் கேப்சூல் என இரண்டு பகுதிகளைக் கொண்ட New Shepard இதுவரை 15 முறை பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது. அதிலும் முன்மாதிரியாக பெசோஸே அதில் பயணம் செய்ய இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
New Shepard விண்கலத்தை பொறுத்தவரையில் அதில் 6 பேர் பயணிக்கலாம். விண்வெளியில் முதன் முதலில் கால்பதித்த அமெரிக்கரான Alan Shepard-ன் நினைவாக இந்த விண்கலத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அடி முதல் மேல் பாகம் வரை மொத்தம் 60 அடி உயரம் கொண்டுள்ளது. இந்த விண்கலத்தின் மூலம் பூமியின் நிலப்பரப்பில் இருந்து 100 கிமீ தூரம் வரை மேலே சென்று விண்வெளியை அடைந்துவிடும் திறனுடையது.
Blue Origin-ல் மேலும் ஒரு விண்கலம் உள்ளது. அதன் பெயர் New Glenn, உலகை முதலில் ராக்கெட் மூலம் சுற்றி வந்த அமெரிக்கரான John Glenn-ன் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது New Shepard-ஐ காட்டிலும் உயரமானது. இதன் உயரம் 270 அடி ஆகும். இரண்டு விண்கலன்களுமே செங்குத்தாக டேக் ஆஃப் ஆகி, செங்குத்தாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Blue Origin நிறுவனத்தினரால் விண்வெளிக்கு கூட்டிச் செல்லப்படும் மனிதர்கள் விண்வெளியில் 11 நிமிடங்கள் உலாவ வைக்கப்படுவார்கள். அவர்கள் தங்களுடைய எடை குறைந்த நிலையை உணர்ந்து, பூமிப்பந்தின் அழகையும், விண்வெளி அனுபவத்தையும் பெற முடியும்.
Also Read: அமேசான் வரி மோசடி சர்ச்சை: இஃன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கிற்கு என்ன தொடர்பு?
Richard Branson என்ற பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் Virgin Galactic என்ற நிறுவனத்தையும், புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் தொடங்கி இதே முயற்சியை மேற்கொண்டுள்ள போதிலும், இருவரையும் பின்னுக்குத்தள்ளி மனிதர்களை விண்ணுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் முதல் நிறுவனமாக Blue Origin-ஐ ஆக்க இருக்கிறார் ஜெஃப் பெசோஸ்.
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்வது பாதுகாப்பானதா என்றால் அது நம்முடைய சொந்த ரிஸ்க் என்று தான் கூறவேண்டும். இன்சூரன்ஸ் கூட கிடைக்காது அல்லது பொருந்தாது என்பதே உண்மையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Amazon, Jeff Bezos, Spacecraft