ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கறுப்பு நிறம், நிராகரிப்புகள்...தடைகளை தகர்த்து 70 வயதிலும் சூப்பர் மாடலாக அசத்தும் 4 பேரக் குழந்தைகளின் பாட்டி!

கறுப்பு நிறம், நிராகரிப்புகள்...தடைகளை தகர்த்து 70 வயதிலும் சூப்பர் மாடலாக அசத்தும் 4 பேரக் குழந்தைகளின் பாட்டி!

70 வயது அமெரிக்க மாடல் பெவர்லி ஜான்சன்

70 வயது அமெரிக்க மாடல் பெவர்லி ஜான்சன்

70 வயதிலும் முதுமையே தெரியாத வகையில் இளமை மாறாமல் பொலிவுடன் இருக்கிறார் சூப்பர் மாடலான பெவர்லி ஜான்சன்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaWashingtonWashington

இந்தியாவில் ஹீரோக்கள் மட்டும் தான் 50 வயதை தாண்டினாலும் ஸ்டாராக தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துள்ளார்கள். ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பின பெண் ஒருவர் தனது 70 வயதிலும் உலகின் முன்னணி மாடலாகவும், நடிகையாகவும், தொழிலதிபாராகவும் வலம் வருகிறார். அவர் தான் பெவர்லி ஜான்சன்.

1952ஆம் ஆண்டு பிறந்த பெவர்லி ஜான்சன், தனது 18 ஆவது வயதில் மாடலிங் துறையில் நுழைந்தார். அந்த காலக்கட்டத்தில் வெள்ளைத் தோல், நீல நிறக் கண்கள் கொண்ட பெண்கள் மட்டுமே அழகு, கவர்ச்சி என்று மாடலிங் துறையில் விரும்பப்பட்டது. இதனால், பெவர்லியின் ஆரம்பகால பயணம் கடுமையான சவால்களை கொண்டிருந்தது. பல பேஷன் டிசைனர்கள் பெவர்லியை நிராகரித்தனர். இருப்பினும் மனம் தளராமல் தனது விடாமுயற்சியால் மாடலிங் துறையில் ஸ்டாராக மிளிரத் தொடங்கினார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற Vogue இதழின் அட்டைப்படத்தின் கவர் மாடலாக பெவர்லி தோன்றினார். வோக் அட்டைப்படத்தில் மாடலாக தோன்றிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் இவர் தான். அதேபோல், பிரான்ஸ் நாட்டின் Elle இதழின் அட்டை கவர் படத்தில் தோன்றிய முதல் கருப்பின பெண் என்ற பெருமையும் பெவர்லியையே சாரும்.

தொடர்ந்து திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ என மாடலிங் மற்றும் பொழுதுபோக்கு துறையை கலக்கிய ஜான்சன் சமீபத்தில் தான் தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். 70 வயதிலும் முதுமை தெரியாத வகையில் இளமை மாறாமல் பொலிவுடன் இருக்கிறார்.

இவருக்கு இரண்டு முறை திருமணமாகி விவகாரத்து நடந்துள்ளது. பின்னர் கிறிஸ் நார்த் என்ற நடிகருடன் உறவில் இருந்தார். ஜான்சனுக்கு ஒரு மகளும் நான்கு பேரக்குழந்தைகளும் உள்ளனர். 4 குழந்தைகளுக்கு பாட்டியாக இருந்தாலும், உடல் பராமரிப்பில் இவரிடம் போட்டி போட ஆளே இல்லை என்று கூறலாம். உணவு கட்டுப்பாடு தொடங்கி, யோகா, தியானம், உடற் பயிற்சி ஆகியவற்றை விடாமல் செய்து வருகிறார் பெவர்லி.

First published:

Tags: Trending, USA