ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பஃபேயில் சாப்பிட்ட பெண்ணுக்கு இரண்டு மடங்கு பில் கட்ட சொன்ன ரெஸ்டாரண்ட் - ஏன் தெரியுமா.?

பஃபேயில் சாப்பிட்ட பெண்ணுக்கு இரண்டு மடங்கு பில் கட்ட சொன்ன ரெஸ்டாரண்ட் - ஏன் தெரியுமா.?

Buffet

Buffet

Trending | இங்கிலாந்தை சேர்ந்த உடல் பருமனான பெண் ஒருவர், பஃபேயில் அதிகமாக சாப்பிட்டதாகக்கூறி ஹோட்டல் நிர்வாகம் இருமடங்கு பில் செலுத்த கோரிய விவகாரம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உடல் பருமன் என்பது ஒருவருக்கு ஜெனிட்டிக் ரீதியாகவோ அல்லது வேறு ஏதேனும் உடல் நலக்குறைபாட்டால் ஏற்படும் ஒரு மாற்றமாகும். ஆனால் இதனை புரிந்துக்கொள்ளாமல் நம்மில் பலர் உடல் பருமனான பெண்களையோ? அல்லது ஆண்களையோ? பார்த்து கேலி செய்யும் பழக்கத்தை விடவில்லை. இதனால் அவர்கள் மனம் மிகவும் வருத்தப்படுமோ? என எண்ணம் துளியும் இல்லாமல் நாம் செய்யக்கூடிய சில விஷயங்கள் குண்டாக இருக்கும் பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

அதிலும் சில சமயங்களில் பொது இடங்களில் அவர்களின் சூழல்கள் சொல்ல முடியாத துயரத்தைத் தான் அவர்களுக்குக் கொடுக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான்.. இங்கிலாந்தில் அரங்கேறியதோடு சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்து கொண்டிருக்கிறது.. அப்படி என்னதான் நடந்தது? என்று நாமும் இங்கே தெரிந்து கொள்வோம்..

இங்கிலாந்தில் குறைந்த பட்ஜெட்டில் அதிகம் சாப்பிட விரும்பும் பலரும் ‘ALL You can Eat’ என்ற ஹோட்டலில் உள்ள பஃபே சிஸ்டத்தில் சாப்பிட செல்வார்களாம். அப்படித்தான் பாப்பி என்ற பெண் இந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். நிர்வாகம் அறிவித்தது போல, குறைந்த பட்ஜெட்டில் பாஃபேயில் உள்ள உணவுகளை சாப்பிட்டுள்ளார். இறுதியில், பில் கட்டுவதற்கு செல்லும் போது வழக்கமாக வரும் பில் தொகையை விட இருமடங்கு பணம் கட்ட சொல்லியுள்ளனர்.

பின்னர் ஏன் இருமடங்கு பில் கட்ட சொல்லியிருக்கிறீர்கள்? என்று குழப்பத்துடன் கேட்டுள்ளார். இதனையடுத்து நீங்கள் பஃபேயில் அதிகமாக சாப்பிட்டுள்ளீர்கள்? எனவே நீங்கள் இரு மடங்கு பில் கட்டியே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த பாப்பி, உடல் பருமனாக இருப்பதால் தான்,அதிகம் சாப்பிட்டேன் என்றும், இரு மடங்கு பில் கட்டச்சொன்னார்கள் என சோசியல் மீடியாவில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இது நான் செய்த தவறா? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

Also Read : அம்மா சொன்ன கடைசி வார்த்தைக்காக... இணையத்தில் பலரது இதயத்தையும் கவர்ந்த கதை

இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளதோடு நெட்டிசன்கள் பல்வேறு கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். அதில் “ ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் ஏன் இவ்வளவு எடை அதிகரித்துள்ளது? என்றும் உங்களது வயிற்றில் இருந்து குழந்தை எப்போது வருகிறது? என்பது போன்று கேளிக்கை மெசேஜ்களையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் மற்றொரு இணையவாசி ஒருவர், நான் மருந்தகத்திற்கு செல்லும் போது ஸ்லீம் பிட் உபயோகிக்கிறீர்களா? என கேட்கின்றனர் எனவும் ஆடை கடைக்கு சென்றால் கூட உங்களுக்கான ஆடை சைஸ் எதுவும் இங்கே இல்லை என தெரிவிப்பது மனதை வருதமடைய செய்யும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

Also Read : கட்டிப்பிடி வைத்தியத்தில் ’கல்லா’ கட்டும் இளைஞர்.. ஒரு மணி நேரத்தில் ரூ.7000 சம்பாதிக்கிறார்

எனவே உடல் பருமன் என்பதை ஒருபோதும் கேலி செய்யாமல் அவர்களின் மனதிற்கு மரியாதைக்கொடுக்க வேண்டும் என பெண்ணியவாதிகள் கூறுகின்றனர். மேலும் இங்கிலாந்தில் உடல் பருமனான பெண் ஒருவர், அதிகம் சாப்பிட்டதாக இரு மடங்கு பில் கட்ட சொன்னது கண்டிக்கத்தக்கது எனவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

First published:

Tags: Restaurant, Trending