உஷார்... ஓடும் ரயிலில் ஸ்டைலாக ஏறிய இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபத்தை பாருங்கள்

உஷார்... ஓடும் ரயிலில்  ஸ்டைலாக  ஏறிய இளைஞருக்கு ஏற்பட்ட பரிதாபத்தை பாருங்கள்
வீடியோ காட்சி
  • News18 Tamil
  • Last Updated: September 25, 2019, 5:38 PM IST
  • Share this:
ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் சிலர் அந்த அறிவுரையை ஏற்கமறுப்பதால் நிகழும் சம்பவங்களில் ஒன்று தான் இதுவும்.

அகமதாபாத் ரயில் நிலையத்தில் ஆஷ்ராம் விரைவு ரயில் நடைமேடையிலிருந்து புறப்பட்டது. அந்த ரயிலை பிடிக்க இளைஞர் ஒருவர் பொறுமையாக நடந்து வந்து ஏறுவது ஸ்டைல் என நினைத்து ஏறியுள்ளார். ஆனால் ஓடும் ரயிலில் சற்று தடுமாறிய இளைஞரின் கால் பகுதி உள்ளேயும் உடல்பகுதி வெளியே இருந்தவாறு நடைமேடையில் சரிந்து உள்ளார்.

அதிர்ஷ்டவசமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் இதை பார்த்ததும் ஓடி வந்து அந்த இளைஞரை  காப்பாற்றினர். இதனால் அந்த இளைஞருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளன. இதனை ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதுப்போன்று யாரும் ஓடும் ரயிலில் ஏறவோ, இறங்கவோ வேண்டாமென்றும் அறிவுறுத்தியும் உள்ளது.

ரயில் நிற்கும் போதும் ஏறாமல் புறப்பட்ட பின் வேகமாக ஒடிச்சென்று ஏறுவதை சாகசமாக சில இளைஞர்கள் நினைக்கின்றனர். ஆனால் கரணம் தப்பினால் மரணம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

Also Watch : அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 50 சர்ச்சைகள்

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்