Home /News /trend /

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு தினம் இன்று! இந்த நாளின் வரலாறு மற்றும் குறிக்கோள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விழிப்புணர்வு தினம் இன்று! இந்த நாளின் வரலாறு மற்றும் குறிக்கோள்

அக்ஷய் ஊர்ஜா தினம்

அக்ஷய் ஊர்ஜா தினம்

அக்ஷய் உர்ஜா திவாஸ் முதன்முதலில் 2004 இல் கொண்டாடப்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான இந்திய அமைச்சகத்துடன்(MNRE) இணைந்து இந்த நாளை முதலில் ஏற்பாடு செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |
அக்ஷய் உர்ஜா திவாஸ் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 அன்று இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கிறது.

பூமியின் வளங்கள் ஒவ்வொரு நாளும் ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து குறைந்து வருகிறது. மின்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் வளங்கள் என்பது மிக அதிகமாக உள்ளது. அந்த வளங்களைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்த வைக்கவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

வரலாறு: அக்ஷய் உர்ஜா திவாஸ் முதன்முதலில் 2004 இல் கொண்டாடப்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கான இந்திய அமைச்சகத்துடன்(MNRE) இணைந்து இந்த நாளை முதலில் ஏற்பாடு செய்தார்.

அன்று ஐடி ஊழியர்..இன்று 199க்கு அளவில்லா பீட்ஸா விற்கும் முதலாளி.. கலக்கும் பஞ்சாபி சர்தார்..

அன்று, 12,000 பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கு பசுமை மற்றும் இயற்கை வளங்களை திறம்பட பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயன்பாட்டை ஊக்குவித்தனர்.

குறிகோள்:

அக்ஷய் உர்ஜா திவாஸ், நீர் மின்சாரம், சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிர்வாயு போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. எதிர்கால சந்ததியினருக்கு எரிசக்தி ஆதாரங்களை விட்டுச்செல்லும் தன்மையை அதிகரிக்கிறது.

இந்திய அக்ஷய் உர்ஜா தினம் 2022 

புதுப்பிக்கத்தக்க சக்திகளை ஊக்குவிக்கும் ஓவியப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், விவாதங்கள், வினாடி வினாக்கள், பேரணிகள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் வைப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, பேட்டரியில் இயங்கும் இரு சக்கர வாகன பேரணி அந்தந்த குழுக்களால் நடத்தப்பட்டது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: India Energy Forum, Manmohan singh, Rajiv gandhi

அடுத்த செய்தி