• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்... இணையத்தில் ட்ரெண்டாகும் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக்!

வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்கள்... இணையத்தில் ட்ரெண்டாகும் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக்!

வலிமை

வலிமை

அஜித் ரசிகர்கள் #ஈஸ்வரமூர்த்திIPS ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • Share this:
    வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்திIPS என தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

    அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதில் காவல் துறை அதிகாரியாக வரும் அஜித்தின் பெயர் ஈஸ்வரமூர்த்திIPS எனும் தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. நாளிதழில் வெளியான தகவலை கொண்டு அஜித் ரசிகர்கள் #ஈஸ்வரமூர்த்திIPS எனும் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அப்டேட் வேண்டும் எனவும் ட்வீட் செய்து வருகின்றனர்.

     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

     



     

    இத்திரைப்படத்தின் 45% சதவிகித படப்பிடிப்பு நிறைவு பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்க திட்டமிடப்பட்ட காட்சிகளை இந்தியாவில் நடத்த முடியாது என்பதால் படக்குழு வெளிநாடு சென்று ஷூட்டிங் நடத்தும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக அண்மையில் தனது யூடியூப் சேனலில் நடிகர் சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

     





    ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: