Home » News » Trend » AJITH KUMAR FANS JUST GATECRASHED HARBHAJAN SINGHS HILARIOUS MODERN THALI MEME HERES WHY VJR

'தட்டில் மொபைல் பாருங்க' ஹர்பஜன் நச்... 'மொபைல்ல எங்க தல-ய பாருங்க' அஜித் ரசிகர்கள் பன்ச்

ஹர்பஜன் சிங்கின் இந்த ட்வீட் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

'தட்டில் மொபைல் பாருங்க' ஹர்பஜன் நச்... 'மொபைல்ல எங்க தல-ய பாருங்க' அஜித் ரசிகர்கள் பன்ச்
ஹர்பஜன் சிங் - அஜித் குமார்
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 2:11 PM IST
  • Share this:
தட்டில் மொபைல் வைப்பதற்கு தனி இடம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஹர்பஜன் சிங் ட்வீட்டை அஜித் ரசிகர்கள் வேறு விதமாக டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சி.எஸ்.கே அணியில் ஹர்பஜன் சிங் இணைந்தவுடன் தமிழில் பல ட்வீட்களை அள்ளி தெளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். ஹர்பஜன் சிங்கின் ட்வீட்களை ரசித்த ரசிகர்கள் அவரை தமிழ் புலவர் என்றே அழைக்க ஆரம்பித்தனர். இதனால் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்டிற்கு தமிழகத்தில் தனி வரவேற்பு உள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட்டை அஜித் ரசிகர்கள் வேறு விதமாக கொண்டாடி வருகின்றனர். மார்டன் தட்டு என்ற தலைப்பில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், சாப்பிடும் தட்டில் மொபைல் வைப்பதற்கு என்று தனி இடம் உள்ளது.




இளைஞர் ஒருவர் சாப்பிட்டு கொண்டே மொபைல் போனை பயன்படுத்துகிறார். இதனால் அந்த புகைப்படத்தை பதிவிட்ட அவர் மார்டன் தட்டு என்று தெரிவித்திருந்தார். பலரும் அதை பார்த்து வேடிக்கையாக சிரித்து கருத்து பதிவிட்டு வந்தனர்.



தட்டில் மொபைல பார்த்தீர்கள், ஆனால் மொபைல்ல யாருன்னு பார்த்தீங்களா என்று அந்த புகைப்படத்தை ஜூம் செய்து அஜித் ரசிகர்கள் போட்டுள்ளனர். அந்த மொபைலில் அஜித்தின் விஸ்வாச பட காட்சி உள்ளது. இதையடுத்து இதை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்தனர்.







அஜித் குறித்து வெளியாகும் எந்த தகவலையும் டிரெண்ட் செய்யும் அவரது ரசிகர்கள், ஹர்பஜனின் இந்த ட்வீட்டையும் விட்டு வைக்கவில்லை. ஹர்பஜனின் ட்வீட் மீண்டும் எப்படியோ தமிழ் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி உள்ளது அவருக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading