இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் வெளிவராத திரைப்படக் காட்சி... குவியும் பாராட்டு!

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். ஐஸ்வர்யாவிற்கு சமூக வலைதளத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

 • Share this:
  நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராத படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இயக்குனர் மணிரத்னத்தின் இருவர் படம் மூலமாக சினிமாதுறையில் அறிமுகமானவர். அந்த படத்தை தொடர்ந்து பல்வேறு மொழி படங்களில் நடித்து உள்ளார்.

  ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு 'ராதேஷ்யம் சீதாராம்' என்ற படத்தில் நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. தற்போது அந்த படத்தில் பாடலுக்கு ஐஸ்வர்யா ராய் நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராயின் அழகையும், அவரது முகபாவனைகளையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
  தமிழில் ஜீன்ஸ், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பக்ஷனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

  ஐஸ்வர்யா ராய் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். ஐஸ்வர்யாவிற்கு சமூக வலைதளத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  Published by:Vijay R
  First published: