மேற்குவங்கத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்ட விமானம்..வைரலாகும் புகைப்படம்..!

இதுபோன்ற சம்பவம் அரிதினும் அரிதாக நடப்பது என்பதால் மக்கள் விமானம் சிக்கிக் கொண்டிருந்த போது அதிசயித்துப் பார்த்துச் சென்றுள்ளனர்.

மேற்குவங்கத்தில் மேம்பாலம் அடியில் சிக்கிக் கொண்ட விமானம்..வைரலாகும் புகைப்படம்..!
விமானம்
  • News18
  • Last Updated: December 27, 2019, 8:20 AM IST
  • Share this:
சீனாவில் மேம்பாலம் அடியில் விமானம் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இந்தியாவிலும் நிகழ்ந்திருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்கத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு அடியே கண்டெய்னர் ட்ரக் ஒன்று இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிச் சென்றது. துர்காபூரில் உள்ள மேம்பாலம் ஒன்றை கடக்க முயன்ற போது ட்ரக் அதில் சிக்கி கொண்டது.

துர்காபூரின் முக்கிய சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தில் ட்ரக் சிக்கி கொண்டதால், அந்த சாலையைக் கடந்து செல்லும் பலரும் வாகன நெரிசலால் நீண்ட நேரம் அவதிப்பட்டுள்ளனர்.


ட்ரக் விமானத்துடன் மேம்பாலத்தில் சிக்கி கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தற்போது ஏபிசி நியூஸ் வெளியிட்டுள்ள தகவல்படி ட்ரக்கின் சக்கரங்களை கழட்டி அதன் உயரத்தைக் குறைத்து பின் மற்றொரு ட்ரக்கை பயன்படுத்தி நகர்த்தியுள்ளனர். இதுப்போன்ற சம்பவம் அரிதினும் அரிதாக நடப்பது என்பதால் மக்கள் விமானம் சிக்கிக் கொண்டிருந்த போது அதிசயித்துப் பார்த்துச் சென்றுள்ளனர்.

 

 
First published: December 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்