மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்..! நகர முடியாமல் திணறும் வைரல் வீடியோ

கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் இந்த வீடியோவை சுமார் 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட விமானம்..! நகர முடியாமல் திணறும் வைரல் வீடியோ
சிக்கிக்கொண்ட விமானம்
  • News18
  • Last Updated: October 23, 2019, 3:28 PM IST
  • Share this:
பயணிகள் விமானம் ஒன்று நடுரோட்டில் மேம்பாலத்துக்கு அடியில் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் திணறும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஹார்பின் நகரில் மேம்பாலம் ஒன்றுக்கு அடியில் பயணிகள் விமானம் ஒன்று சிக்கிக்கொண்டது. வீடியோவில் முதலில் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் மிகப்பெரிய ட்ரக் ஒன்றில் விமானத்தை ஏற்றிச்செல்லும் போது அந்த ட்ரக் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

புதிதாக உற்பத்தியாகி அசம்பிள் செய்யப்படாத விமானத்தை மீட்க பல ஊழியர்கள் போராடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் ட்விட்டரில் இந்த வீடியோவை சுமார் 27 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.


‘கூகுள் மேப் பார்த்துப் பயணித்தால் இப்படித்தான் ஆகும்’ என ட்விட்டர் வாசிகள் சிலர் கேலி செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ ‘இதுதான் சீனா’ என்று விமர்சித்து வருகின்றனர்.



Also see:

First published: October 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading