Home /News /trend /

பேனிக் அட்டாக்கில் மயங்கி விழுந்த பெண்; கண்டுகொள்ளாத ஏர் இந்தியா ஊழியர்கள்! - வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

பேனிக் அட்டாக்கில் மயங்கி விழுந்த பெண்; கண்டுகொள்ளாத ஏர் இந்தியா ஊழியர்கள்! - வைரல் வீடியோவில் நடந்தது என்ன?

மயங்கி விழுந்த பெண்; கண்டுகொள்ளாத ஏர் இந்தியா ஊழியர்கள்!

மயங்கி விழுந்த பெண்; கண்டுகொள்ளாத ஏர் இந்தியா ஊழியர்கள்!

குறிப்பிட்ட வீடியோவில், அந்தப் பெண்ணும் அவருடன் வந்த இரண்டு பயணிகளும் பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டனர்.

    ஏர் இந்தியா ஊழியர்கள் போர்டிங் கேட்டில் நுழைய மறுக்கவும், ஒரு பெண் 'பேனிக் அட்டாக்கிற்கு' ஆளாகி தரையில் விழுந்து துடிதுடிக்கும் ஒரு "விசித்திரமான" வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பிட்ட வீடியோவை அவரது மருமகன் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, ஏர் இந்தியா நிர்வாகத்தை அடையும் வரை மற்றும் குறிப்பிட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இதை ஷேர் செய்யுமாறு மக்களை வலியுறுத்தி உள்ளார்.

    மேலும் இதய நோயாளியும் மற்றும் நீரிழிவு நோயாளியுமான அவருக்கு மருத்துவ உதவி செய்ய ஆட்களை அழைப்பதற்குப் பதிலாக, ஏர் இந்தியா ஊழியர்கள் செக்யூரிட்டியை அழைத்து அவரை விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியதாகவும் அவரது மருமகன் குற்றம் சாட்டி உள்ளார். இருப்பினும், அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக ஏர் இந்தியா விமான நிலையம், இது ‘தவறானதாக உள்ளது’ என்று கூறியுள்ளது.

    இதோ அந்த வீடியோ:




    குறிப்பிட்ட வீடியோவில், அந்தப் பெண்ணும் அவருடன் வந்த இரண்டு பயணிகளும் பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொண்டதால், சரியான நேரத்தில் தங்கள் விமானத்தில் ஏறுவதற்கு ஏர் இந்தியா ஊழியர்களிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உதவி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    செக்யூரிட்டி கிளியரிங் முடிந்த பிறகு, ஐந்து நிமிடங்களில் போர்டிங் கேட்டை அடைவோம் என்று சொன்னார்கள். இருப்பினும், அவர்களுக்கான வாயில்கள் மூடப்பட்டன. அந்த பெண்ணின் மகனின் இறுதித் தேர்வு நாள் என்பதால், அவர் விமானத்தை தவறவிட்ட பீதியில் 'பேனிக் அட்டாக்கிற்கு' ஆளாகி உள்ளார். அந்த நிலையிலும் கூட விமான நிலையத்தை விட்டு வெளியேறும்படி கேட்டதும், மருத்துவ உதவி எதுவும் வழங்காததும் நிலைமையை இன்னும் மோசமாக்கி இருக்கிறது.

    Also Read : உலகின் தனிமையான தபால் நிலையத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த துணிச்சலான பெண்

    இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா பயணி ஒருவர்மயங்கி கீழ விழுவதை காட்டும் வீடியோ கிளிப்பிங் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோ கேட் அருகே படுத்திருக்கும் பயணியிடம் ஏர் இந்தியா ஊழியர்கள் அக்கறை செலுத்தாமல் இருப்பது போன்ற தவறான சித்திரத்தை வெளிப்படுத்துகிறது." என்று கூறியுள்ளது.

    பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சௌகரியத்திற்கு விமான நிறுவனங்கள் எப்பொழுதும் முன்னுரிமை அளிக்கும் என்பதை விளக்கிய ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கையானது, "இருப்பினும், ஒரு பொறுப்பான விமான நிறுவனமாக, ஒழுங்குமுறை அதிகாரிகளால் வகுக்கப்பட்ட விதிகளை நாங்கள் கடைபிடிக்க வேண்டும்; எந்தவொரு சந்தர்ப்பத்திலும், குறிப்பாக அனைத்து பயணிகளும் சரியான நேரத்தில் விமானத்திற்குள் ஏறியிருந்தால், விமானத்தை தாமதப்படுத்த முடியாது. குறிப்பிட்ட வீடியோவில் என்ன நடக்கிறது என்கிற குழப்பத்திற்கு இதுவொரு தீர்வாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்றும் கூறியுள்ளது.

    ஒரு லட்சத்திற்கும் மேலான லைக்ஸ்களை பெற்றுள்ள குறிப்பிட்ட வீடியோவானது 4500 க்கும் மேற்ப்பட்ட கமெண்ட்களையும் பெற்று வைரல் ஆகி வருகிறது. “உங்கள் அத்தை பெண் இப்போது நலமாக இருக்கிறார் என்று நம்புகிறேன். ஏர் இந்தியா மோசமான விமான நிறுவனமாகும். இது அவர்களின் மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் மோசமான நடத்தையாகும். ரீஃபண்ட் நிகழ்வுகளிலும் இது இன்னும் மோசமாக உள்ளன, ஒரு வருடமாக அவர்கள் எனது ரிட்டர்ன்ஸ்-ஐ திருப்பித் தரவில்லை" என்றும் ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி