எல்லோருக்கும் பிடித்த வேலை கிடைப்பதில்லை. இருந்தாலும், ஒரு சிலர் கிடைத்த வேலையை பிடித்த வேலையாக மாற்றிக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் நீடிக்கும் பொழுது அதன் மீது தனிப்பட்ட விருப்பமும், பற்றுதலும் ஏற்பட்டு விடுகிறது. குறைந்தது, மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரே நிறுவனத்தில் வேலை செய்து, பின்பு அங்கிருந்து வேறு ஒரு அலுவலகத்துக்கு மாறும் போதே வருத்தமாகத்தான் இருக்கும். இந்நிலையில் பல ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வேலை பணி ஓய்வு பெற்று செல்லும் போது, மிகப்பெரிய வருத்தம் ஏற்படும்.
ஒரு வேலையை எவ்வளவு நேசிக்கிறோம், அர்பணிப்புடன் செய்கிறோம் என்பது அந்தப் பணியில் இருந்து விலகும் போது தான் தெரியும். ஏர்ஹோஸ்டஸ் ஒருவர் தன்னுடைய பணியின் இறுதி நாளன்று வெளியிட்ட ஒரு வீடியோ பார்க்கும் அனைவரையும் நெகிழ்த்தியுள்ளது. கண்கலங்கிய நெட்டிசன்கள் அதை பாராட்டி வைரலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஒரு ஏர் ஹோஸ்டஸ் தன்னுடைய இறுதி வேலை நாளன்று, கண்கள் கலங்க, மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பயணிகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.
வழக்கமாக விமானத்தில் அனைவரும் ஏறிய பின்பு விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமான பணிப்பெண்கள் அனைவருக்கும் அறிவிப்புகளை மேற்கொள்வார்கள். அதேபோல, வேலை இறுதி நாளன்று இந்த ஏர் ஹோஸ்டஸ் பயணிகளுக்கு முன் நின்று கொண்டு லேசாக சிரித்துக்கொண்டே மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார்.
View this post on Instagram
“இந்த நாள் வரும் என்று என் கனவில் கூட நினைக்கவில்லை, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. என்னுடைய இதயத்தின் ஒரு பகுதியை பிரிவது போல் இருக்கிறது” என்று கூறினார். அப்போது அவரின் கண்கள் கலங்கிவிட்டது. கண்களைத் துடைத்துக்கொண்டு “இந்த நிறுவனம் எனக்கு தேவையான அனைத்தையுமே வழங்கியுள்ளது. நிறுவனத்திற்கு வேலை செய்ய நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். இதேபோன்று சிறந்த நிறுவனம் எங்கேயும் கிடையாது.
Also Read : இனத்துக்கே அசிங்கம்... காட்டெருமை கூட்டத்தை பார்த்து பீதியாகி மரத்தில் தொங்கும் காட்டுராஜா!
நிறுவனத்தில் அனைவரையும் நன்றாக, குறிப்பாக பெண் ஊழியர்களை மிகவும் நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள். இங்கிருந்து செல்வதற்கு எனக்கு மனமில்லை, ஆனால் எனக்கு செல்ல வேண்டும் வேறு வழியில்லை” என்று நடுங்கும் குரலில் அவர் தொடர்ந்து பேசினார். அது மட்டுமின்றி பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தார். “எங்கள் விமானத்தில் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் உங்களால்தான் எங்களுக்கு நேரத்தில் ஊதியம் கிடைத்தது” அனைத்து பயணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
Also Read : மணமேடையில் மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அந்த விமானப் பணிப்பெண் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அது மட்டுமின்றி, இந்த வீடியோ கமெண்ட்டுகளின் மூலம், பணி ஓய்வு பெறும் ஏர் ஹோஸ்டஸ் பெயர் சுரபி என்றும் தெரியவந்துள்ளது. அவரை தனிப்பட்ட முறையில் அறிந்த யூசர்கள், அவரை பாராட்டித் தள்ளினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Air hostess, Trending, Viral Video