HOME»NEWS»TREND»air ambulances to fighting crime 10 ways how helicopters changed the world vin ghta

ஏர் ஆம்புலன்ஸ் முதல் ட்ரோன்கள் வரை... ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!

தனியார் ஜெட் விமானங்களுடன் ஒப்பிடும்போது ஹெலிகாப்டர்களும் விமான பயணத்தில் ஒரு  கவுரவ போக்குவரத்து சாதனமாக பார்க்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர்களில் செல்வது வழக்கம்.

ஏர் ஆம்புலன்ஸ் முதல் ட்ரோன்கள் வரை... ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!
படம்: APF
  • News18
  • Last Updated :
  • Share this:

உலகத்திற்கு ஹெலிகாப்டர் என்ற எளிய வான்வழிப் போக்குவரத்து இதே மாதத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. இந்த சாதனம் பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் எட்டியென் ஓஹிமிச்சென் என்பவரால் முதன் முதலில் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவரது இயந்திரம் சோதனைக்காக கடந்த 1921ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதி, அன்று வானத்தை நோக்கிச் சென்றது. மேலும் அதில் வெற்றியும் அடைந்தது. அவரது சக பிரெஞ்சுக்காரர் கண்டுபிடித்த "பறக்கும் சைக்கிள்" சாதனத்தை விட எட்டியென் ஓஹிமிச்சென் உருவாக்கிய இயந்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. 

அன்று முதல், சாப்பர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஒரு முக்கிய தொழில்நுட்ப சாதனமாக மாறியுள்ளது. இப்போது, ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கைகளில் பல உயிர்களைக் காப்பாற்ற பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான் வரையிலான போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முக்கிய தலைவர்கள், விஐபிக்களை அழைத்து செல்வதில் இருந்து போரில் ஏவுகணை துப்பாக்கிசூடு வரை ஹெலிகாப்டரின் மதிப்புமிக்க பயன்பாடுகளை நம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

அல்டிமேட் ஸ்டேட்டஸ் சிம்பல்ஸ் (ULTIMATE STATUS SYMBOLS)தனியார் ஜெட் விமானங்களுடன் ஒப்பிடும்போது ஹெலிகாப்டர்களும் விமான பயணத்தில் ஒரு  கவுரவ போக்குவரத்து சாதனமாக பார்க்கப்படுகிறது. உலகத் தலைவர்கள் முக்கிய கூட்டங்களுக்கு ஹெலிகாப்டர்களில் செல்வது வழக்கம். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எப்போதும் தனது கோல்ஃப் மைதானங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்வாராம். இதேபோல, பிரிட்டிஷ் இளவரசி எலிசபெத் போன்ற பல்வேறு உலக தலைவர்கள் ஹெலிகாப்டர்களில் பயணம் செய்து வருகின்றனர்.

ஹெலிகாப்டர்களை சொந்தமாகிய விஐபிக்கள்:

ஹாலிவுட் நட்சத்திரம் ஏஞ்சலினா ஜோலி 2012ம் ஆண்டில் 1.6 மில்லியன் செலவில் ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். அதேபோல், ஹாரிசன் ஃபோர்டு பெல் 407 ஹெலிகாப்டரை வைத்திருக்கிறார். கிளின்ட் ஈஸ்ட்வுட் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஹெலிகாப்டர் பைலட்டாக இருந்து வருகிறார். அதேபோல தமிழ் திரையுலகில் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளார். பல தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ட்ரோன் உருவாக்கத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.  அதேசமயம், ஹெலிகாப்டர் மீதான அதீத அன்பு சிலருக்கு விபரீதத்தை தேடித் தந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் தனது சொந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த பொது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அதேபோல 2018ம் ஆண்டு கோடீஸ்வரரும் லெய்செஸ்டர் நகர உரிமையாளருமான விச்சாய் ஸ்ரீவதானப்பிரபா தான் விரும்பும் கால்பந்து கிளப்பைப் பார்க்க ஹெலிகாப்டரில் பயணித்த போது ஏற்பட்ட ஒரு பயங்கரமான விபத்தில் பலியானார்.

போரில் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்கள் (WEAPONS OF WAR)

வியட்நாமில் இருந்து ஆப்கானிஸ்தான், பால்க்லேண்ட்ஸ், சிரியா மற்றும் வளைகுடா உள்ளிட்ட போர்களில் ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்கு வகித்தன. இவை போரில் தாக்குதல் நடந்த பயன்படுத்தப்படுகின்றன. அங்கு அவை அதிநவீன ஏவுகணைகளுடன் சக்திவாய்ந்ததாகவும் பேரழிவு தரக்கூடியதாகவும் இருக்கக்கூடும். மேலும் போருக்கான துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

தேடல் மற்றும் மீட்பு பணிகளில் ஹெலிகாப்டர்கள் (SEARCH AND RESCUE)

புயல் மற்றும் கனமழை போன்ற பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு முக்கிய பங்கு வகித்தது. கடல் சீற்றங்களில் இருந்தும், மலை உச்சிகளிலிருந்தும், நிலச்சரிவுகள் மற்றும் பூகம்பங்களிலிருந்தும் மக்களை காப்பாற்றுவதற்கு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1986ம் ஆண்டில் உக்ரைனில் உள்ள செர்னோபில் ஆலையில் உலகின் மிக மோசமான சிவில் அணுசக்தி விபத்து ஏற்பட்டது. விபத்துக்குப் பின்னர், ஆயிரக்கணக்கான டன் ஈயம், மணல் மற்றும் களிமண்ணைக் கொட்டி பேரழிவை ஏற்படுத்திய அணு உலையை மூட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. 2020 ஆம் ஆண்டில் பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிவு துறைமுக வெடிப்பைத் தொடர்ந்து தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

ஃபைட்டிங் க்ரைம் (FIGHTING CRIME)

ஹெலிகாப்டர்கள் காவல்துறையிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரவு பார்வை, முன்னோக்கி பார்க்கும் அகச்சிவப்பு (FLIR) கேமராக்கள், கண்ணீர்ப்புகை விநியோகிப்பாளர்கள் மற்றும் தேடல் விளக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சந்தேக நபர்களைப் பிடிக்கவும், கார்களைத் துரத்தவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற பெரிய பொது ஒழுங்கு நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கான ஒரு முக்கிய கருவியாக அவை இப்போது உள்ளன.

Also read... உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரியின் ஆயுட்காலம் அதிகரிக்க இந்த டிப்ஸ்கள் முக்கியம்...!

ஏர் அம்புலன்ஸ்: (AIR AMBULANCES)

சில ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸாக செயல்படுகின்றன. அதில் முழுமையான தீவிர சிகிச்சை பாகங்கள் பொருத்தப்பட்டிருக்கும். விபத்துக்கள் நடந்த இடத்திலிருந்து மக்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது முதல் நோயாளிகளை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை வான்வழி அம்புலன்ஸாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

டிரோன்கள்: (Drones)

ட்ரோன்கள் உருவாக்கத்திற்கு ஹெலிகாப்டர்கள் ஒரு முன்மாதிரி வடிவமாக செயல்படுகின்றன. அவை பிளேடிங்ஸ் முதல் போர் ஆயுதங்கள் மற்றும் தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் கருவிகள் என பலவகைகளில் உள்ளன. ரோட்டரி விங் ட்ரோன்கள் தேடல் மற்றும் மீட்பு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: