காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பது கோவிட்-19 வைரஸை குணப்படுத்துமா.? தீவிர ஆய்வில் எய்ம்ஸ் விஞ்ஞானிகள்

மாதிரி படம்

இந்து மதத்தில் ஏராளமான கடவுள்களும், அந்த கடவுள்களை பூஜிக்க ஏராளமான மந்திரங்களும் அருளப்பட்டுள்ளன. எனினும் இந்த மந்திரங்களில் எல்லாம் முதன்மையானதாக திகழ்கிறது மிக எளிமையாக இருக்கும் காயத்ரி மந்திரம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசி வரும் நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவ அறிவியல் வியக்கத்தக்க வகையில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும், மருத்துவர்களின் நம்பிக்கை பட்டியலில் ஆன்மீகத்திற்கு என்று எப்போதுமே தனி இடம் உண்டு.

ஒரு வருடத்திற்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு படிப்படியாக தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே அறிவியலும், ஆன்மீகமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை தான் என்பதை நிரூபிக்கும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனை விஞ்ஞானிகள் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் கொரோனா பாதித்த நோயாளிகளை குணப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்து மதத்தில் ஏராளமான கடவுள்களும், அந்த கடவுள்களை பூஜிக்க ஏராளமான மந்திரங்களும் அருளப்பட்டுள்ளன. எனினும் இந்த மந்திரங்களில் எல்லாம் முதன்மையானதாக திகழ்கிறது மிக எளிமையாக இருக்கும் காயத்ரி மந்திரம். காயத்திரி என்னும் ஒலியின் அளவை கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதே இதற்கு காயத்திரி மந்திரம் என்று பெயர் வர காரணம்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த காயத்திரி மந்திரத்தை உச்சரிப்பதும் மற்றும் பிராணயாமம் என்றழைக்கப்படும் மூச்சுப் பயிற்சி செய்வதும், கொடூர தொற்றாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொடர்பான சிகிச்சையில் வழக்கமான சிகிச்சை முறைகளுடன் சேர்ந்து பலன் அளிக்குமா என்று ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் (டிஎஸ்டி) நிதி உதவி அளிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு பாரம்பரிய சிகிச்சையைப் பெறுவதோடு ஒப்பிடுகையில் கயாத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா உண்மையில் கோவிட் -19 சிகிச்சையின் போது நோயாளிகளை விரைவாக குணமாக்க முடியுமா என்பதை கண்டறிவதே இந்த ஆய்வு செய்யப்படுவதன் பின்னணி ஆகும். இதற்காக 20 கொரோனா பாதித்த நோயாளிகள் தலா 10 பேர் என இரு குழுவாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழு நோயாளிகள் தொற்றுக்கான வழக்கமான சிகிச்சையுடன் தினமும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதோடு, காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மணி நேர பிராணயாமா அமர்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறர்கள்.

Also read... ஆன்லைன் கேம் விளையாட நண்பனிடம் ரூ.75,000 வாங்கிய சிறுவன்... பணத்தை திரும்ப கொடுக்காததால் நிகழ்ந்த விபரீதம்...!

2-வது குழுவில் உள்ள நோயாளிகளுக்கு வழக்கமான கோவிட் -19 சிகிச்சை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 நாட்கள் இந்த பரிசோதனை செய்யப்பட்டு, இரு குழுவில் உள்ள நோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். 14 நாட்களுக்கு பின்,ஆய்வின் முடிவுகளை ஆராய்ந்து, காயத்திரி மந்திரம் மற்றும் பிராணயாமா செய்த நோயாளிகள் உடலில் குறிப்பிடத்தக்க நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவார்கள்.

இந்த ஆய்வின் முடிவில் கொரோனவிற்காக வழக்கமான சிகிச்சை எடுத்து கொண்டவர்களை விட காயத்ரி மந்திரம் மற்றும் யோகா பயிற்சி செய்தவர்களின் உடலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அது ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் இது தொடர்பாக அறிவியல் ரீதியான அறிக்கை அளிக்கப்பட உள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: