அகமதாபாத் உணவகம் தோனி கிச்சடி, கோலி கமான் என மெனுக்களுக்கு கிரிக்கெட் வீரர்களின் பெயரை சூட்டி வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
கிரிக்கெட்டைப் போலவே இந்திய உணவுகளுக்கும் உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. ஏனென்றால், பல்வேறு கலாச்சார மக்கள் வாழும் இந்தியாவில், மாநிலத்துக்கு மாநிலம் உணவு வகையிலும் மாறுபடுகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் உணவுகளை விரும்பி சாப்பிடுவதற்கென்றே அந்த மாநிலங்களுக்கு பயணம் செய்பவர்கள் நாடு முழுவதும் ஏராளமானோர் உள்ளன. ஆனால், அந்த குறையை போக்கும் விதமாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மேரியாட் (Mariott) உணவகம், இந்திய உணவுகளின் சங்கமமாக உள்ளது. இந்த உணவகத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களின் ஸ்பெஷல் உணவுகள் உள்ளன.
அண்மையில் இந்த உணவகம் நடத்திய தாலி தோசை போட்டி (Motera Thali) வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. ஏனென்றால், உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் பெயரை சூட்டி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நாடு முழுவதும் தாலி உணவுப் போட்டிகள் வழக்கமாக பல்வேறு உணவகங்களில் நடைபெறுகிறது என்றாலும், இந்த உணவகத்தில் சற்று வித்தியாசமாக அண்மையில் நடத்தப்பட்டது.
அதாவது, இந்த உணவகம் 5 அடி நீளமுள்ள தாலி தோசையை உருவாக்கி அதற்கு 'மொடீரா தாலி' என பெயர்சூட்டியுள்ளது. அந்த தோசை மற்றும் அதனுடன் வழங்கப்படும் சைடிஸ்களை சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும் இந்தப் போட்டியில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 4 பேருக்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.
சுவாரஸ்யமாக, இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மூலம் டிஸ்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கோலி கமான், பாண்ட்யா பத்ரா, தோனி கிச்சடி, புவனேஷ்வர் பார்தா, ரோஹித் ஆலு ரஷிலா, ஷார்துல் ஸ்ரீகண்ட், பவுன்சர் பசுண்டி, ஹாட்ரிக் குஜராத்தி பருப்பு, பூம்ரா பிந்தி, ஹர்பஜன் ஹாண்ட்வோ டிஸ்கள் மெனுவில் உள்ளன. இந்த டிஸ்கள் அனைத்தும் மொடீரா தாலி உணவுப் போட்டியில் இருக்கும். மேலும், ஸ்நாக்ஸ் மற்றும் ரொட்டிகள் உள்ளிட்ட சுவையான தின்பண்டங்களும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது.
Also read... பாஸ்தாவுக்கு மேலும் சுவை சேர்க்கக்கூடிய பசலைக்கீரை பேசில் பெஸ்டோ சாஸ்... ஆரோக்கியமோ ஏராளம்!
இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பர்தீவ் படேல் தனது நண்பர்களுடன் சென்று கலந்து கொண்டார். பின்னர், மேரியாட் உணவக ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்ட மேரியாட் உணவகம், பர்தீவ் படேல் தாலி தோசைப் போட்டியில் கலந்து கொண்டதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பர்தீவ் படேல், அண்மையில் சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக பர்தீவ் படேல் விளையாடியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.