ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்!

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்!

மாதிரி படம்

மாதிரி படம்

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் துருவல் படேலின் மனைவி கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஷாஜாகான் மறைந்த தன் காதல் மனைவியின் சார்பாக கட்டிய தாஜ்மஹால் தான் உலக அதிசயமாகி, நூற்றாண்டுகள் கடந்தும் அவர்கள் காதலை உலகுக்கு சொல்லிக்கொண்டிருக்கிறது. இது ஒரு உதாரணம் தான். இப்படி பல உதாரணங்களை சொல்ல முடியும். எகிப்தில் உள்ள பிரமிடுகள் கூட இறந்தவர்களின் நினைவை போற்றும் விதமாக உருவாக்கப்பட்ட கட்டிடக்கலை தான்.

இதே போன்ற ஒரு நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்திருக்கிறது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் துருவல் படேலின் மனைவி கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக கடந்த மே 12 ஆம் தேதி துருவல் படேலின் மனைவி நேஹா தனது உயிரிழந்தார். படேல் தனது மனைவி நேஹாவின் உயிர் பிரியும் கடைசி நேரத்தில் மூச்சுத் திணறியபடி உயிரிழந்ததை பார்த்து வேதனையடைந்திருக்கிறார்.

Also Read : அடுத்த 2 அல்லது 4 வாரத்தில் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - மகாராஷ்டிரா நிபுணர் குழு எச்சரிக்கை

இந்நிலையில் நேஹாவிற்கு தனித்துவமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தும் விதமாக துருவல் படேலும் அவரது 15 வயது மகன் புர்வாவும் சேர்ந்து 450 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த தனது மனைவியின் நினைவாக, இயற்கையாகவே ஆக்ஸிஜன் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். சித்பூர் என்ற ஊரில் தனது மனைவியின் இறுதிச் சடங்கை மேற்கொள்ளும்போது இந்த உறுதிமொழியை அவர் எடுத்திருக்கிறார்.

அதாவது நேஹாவின் இறுதிச்சடங்கின் போது அங்கிருந்த மதபோதகர் , அப்போது பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகள் அவர்களால் நடப்பட்ட மரங்களில் இருந்து கிடைத்தவை அல்ல. மற்றவர்கள் அவர்களுக்கு வழங்கிய கொடை என்று கூறியுள்ளார். இதுதான் படேலுக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. இதனையடுத்து அவர் மரங்களை நடுவது என்ற உறுதிமொழியை எடுத்துள்ளார்.

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் படேலின் குடும்பத்தில் 5 பேரில் நேஹா, துருவல், அவரது மகன், துருவலின் அப்பா என நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் நேஹாவின் நிலைமை 3 வது நாளில் இருந்து மோசமான நிலையில் இருந்திருக்கிறது.

Also Read : கொரோனா மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு ஆபத்தா? ஆய்வு கூறுவது என்ன?

நேஹாவிற்கும் துருவல் படேலுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணமாகியிருக்கிறது. இந்த 17 வருட திருமண வாழ்க்கையில் ஒருமுறை கூட இருவரும் பிரிந்து இருந்தது இல்லையாம். தற்போது நேஹா இல்லாத வாழ்க்கையை அவரால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லையாம். கிட்டத்தட்ட நேஹா இறந்து ஒரு மாதம் ஆகியும் துருவலால் அவர் இல்லாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவரின் மறைவை என்றும் நினைவில் கொள்ளும் விதமாக அவர் இந்த மரம் நடும் முடிவை எடுத்திருக்கிறார். துருவல் தனது மனைவி இழந்ததை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருக்காமல் மரம் நடுவது எனும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது குறித்து அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published:

Tags: Ahmedabad, CoronaVirus, Covid-19, Gujarat, Oxygen