2007-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Google Street View ) தனது 15-வது பிறந்தநாளை கடந்த வாரம் கொண்டாடியது. டெலிபோர்ட்டேஷன் எப்படி இருக்கும் என்பதை உணரவைத்த தொழில்நுட்பமான கூகுள் ஸ்ட்ரீட் வியூ, இதுவரை 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 220 பில்லியனுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்து உள்ளது.
கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது அற்புத தொழில்நுட்பமான Google Street View-விற்காக எடுக்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூக்களில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடுகள், நகரங்கள் மற்றும் நினைவுச்சின்ன இடங்களை பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியது. கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வில் அதிகம் பார்வையிடப்பட்ட நாடு இந்தோனேஷியாவாகும். இந்த நாட்டின் தலைநகரமான ஜகார்த்தா கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட நகரங்களில் முதலிடம் பிடித்து உள்ளது. அதே போல கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களின் பட்டியலில் இந்தியாவின் தாஜ்மஹால் இடம் பிடித்துள்ளது.
ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் மூன்று நினைவுச்சின்னங்களில் தாஜ்மஹாலும் ஒன்றாக உள்ளது இந்தியர்களை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது. இதன் மூலம் உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் மெய்நிகர் உலகில் (virtual world) அதிகம் பார்வையிடப்பட்ட மூன்றாவது சுற்றுலா தலமாக உள்ளது. கூகுள் ஸ்ட்ரீட் வியூ-வில் அதிகம் பார்வையிடப்பட்ட நினைவு சின்னங்களின் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களை உலகின் மிக உயர்ந்த கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா மற்றும் பாரிஸின் ஈஃபிள் டவர் இடம் பெற்றுள்ளன. 1632-ஆம் ஆண்டு பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட தாஜ்மஹால் இன்றும் உலகின் மிகப்பெரிய கட்டிடக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. தற்போது மட்டுமல்ல கடந்த 2015-ஆம் ஆண்டிலும், கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் பத்து சுற்றுலா தலங்களின் பட்டியலில் தாஜ்மஹால் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றாக இருப்பதால், தாஜ்மஹால் ஆண்டுதோறும் 7 முதல் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கிறது, ஒரு வருடத்தில் 0.8 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு பார்வையாளர்களும் வருகிறார்கள். இதனிடையே அதிகம் பார்வையிடப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தோனேசியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் அடங்கும். கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்க்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் ஜகார்த்தாவைத் தொடர்ந்து டோக்கியோ, மெக்ஸிகோ சிட்டி, சாவ் பாலோ போன்ற நகரங்கள் அடங்கும்.
Also Read : எங்க காணோம்...! டிவியில் கோல்ப் ஷாட்டை பார்த்து பந்தை தேடி அழைந்த நாய் - வைரல் வீடியோ
கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் 10 நாடுகள்:
இந்தோனேஷியா, அமெரிக்கா, ஜப்பான், மெக்சிகோ, பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, தைவான், பிரான்ஸ், யுனைட்டட் கிங்டம்
கூகுள் ஸ்ட்ரீட் வியூவில் அதிகம் பார்வையிடப்பட்ட முதல் 10 நகரங்கள்:
ஜகார்த்தா, டோக்கியோ, மெக்சிகோ சிட்டி, சாவ் போலோ, புவெனஸ் ஐரிஸ், நியூயார்க் , இஸ்தான்புல், தைபே, பாரிஸ், ஒசாகா
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.