முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பள்ளியில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் - வீடியோ வைரலானதால் பணியிடை நீக்கம்

பள்ளியில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள் - வீடியோ வைரலானதால் பணியிடை நீக்கம்

குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள்

குத்தாட்டம் போட்ட ஆசிரியர்கள்

ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் ஆசிர்யர்கள் சிலர் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலானதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் பள்ளி வகுப்பறையில் ஐந்து ஆசிரியைகள் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர். 5 ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நோட்டீசுக்கு ஆசிரியர்கள் சரியாக விளக்கம் அளிக்கவில்லை. விளக்கம் திருப்தியாக இல்லாததால்,  ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

' isDesktop="true" id="571729" youtubeid="prE8ytk9OwI" category="trend">

இதேபோல் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே பாலிவூட் பாடலுக்கு நடனம் ஆடிய இளம்பெண் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதால், இளம் பெண் மீது ஞாயிற்றுக்கிழமை காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

' isDesktop="true" id="571729" youtubeid="9y09lMKR-Hc" category="trend">

இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதற்காக ராமர்-சீதா கோவிலின் வெளியே நடனமாடியதாக பஜ்ரங்தள் தலைவர் புகார் அளித்ததை அடுத்து இளம்பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: News On Instagram, Trending, Viral Video