கொரோனா நிவாரண நிதியாக தாய்நாட்டுக்கு ₹81 கோடி நிதி அளித்த பணக்கார குடும்பம்!

இத்தாலியில் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 5 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளார்கள்.

கொரோனா நிவாரண நிதியாக தாய்நாட்டுக்கு ₹81 கோடி நிதி அளித்த பணக்கார குடும்பம்!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உதவியாய், அவர்களின் தாய்நாடான இத்தாலிக்கு, அந்நாட்டின் பணக்கார குடும்பம் ஒன்று சுமார் 81 கோடி ரூபாய் நிதி உதவியாய் அளித்துள்ளது.

உலகத்தையே கொரோனா வைரஸ் உலுக்கியெடுத்து வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் இத்தாலி சந்தித்து வருகிறது. நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர இத்தாலி அரசு மிகவும் தவித்து வருகிறது.

இந்நிலையில் இத்தாலியின் மிகப்பெரிய பணக்கார குடும்பமான அக்னெல்லி குடும்பத்தார் இத்தாலி அரசுக்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 81 கோடி ரூபாய்) மற்றும் 150 வென்ட்டிலேட்டர்களை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது.


இக்குடும்பத்தாருக்குச் சொந்தமானதுதான் ஃபியட் மற்றும் ஃபெராரி கார் உற்பத்தி நிறுவனங்கள். இத்தாலியில் இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 5 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளார்கள்.

மேலும் பார்க்க: வீட்டிலிருந்து பணியா? பிஎஸ்என்எல் வழங்கும் இலவச இணைய ஆஃபர்
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்