ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

71 வயதில் வெயிட்லிப்டிங் - ஒரே நாளில் 4 உலக சாதனைகளை படைத்த முதியவர்!

71 வயதில் வெயிட்லிப்டிங் - ஒரே நாளில் 4 உலக சாதனைகளை படைத்த முதியவர்!

ஒரே நாளில் 4 உலக சாதனைகளை படைத்த முதியவர்

ஒரே நாளில் 4 உலக சாதனைகளை படைத்த முதியவர்

குழந்தையின் இந்த சாதனை வெயிட்லிப்டிங் உலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

சாண்டியாகோவில் நடைபெற்ற வட அமெரிக்க பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 71 வயது முதியவர் ஒருவர், அனைவரும் வியக்க வைக்கும் வகையில் 4 உலக சாதனைகளை படைத்துள்ளார்.

வயதான காலத்தில் ஓய்வெடுப்பதை மட்டுமே பெரும்பாலானோர் விரும்புவார்கள். ஆனால், ஒரு சிலர் மட்டும் வழக்கான பார்முலாவுக்குள் இல்லாமல் விதிவிலக்காக இருக்கிறார்கள். அப்படியான ஒரு முதியவர் தன்னுடைய 71 வயதில், வெயிட்லிப்டிங் (பளுதூக்கும்) சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று அனைவரும் வியக்கை வைக்கும் வகையில் உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.  கடந்த நவம்பர் மாதம் சாண்டியாகோ நகரில் வெயிட்லிப்டிங் USPA வட அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 71 வயது முதியவரான ரூடி காண்டல்ப் (Rudy Kandlub), டெட் லிப்ட் 234 கிலோ எடைப்பிரிவு, ஸ்குவாட் 195 கிலோ பிரிவு (squat ), பெஞ்ச் பிரஸ்டு 303 கிலோ பிரிவு (bench pressed ) ஆகிய 4 போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றதுடன், ஒரே நாளில் 4 உலக சாதனைகளையும் படைத்துள்ளார்.
 
View this post on Instagram

 

A post shared by Rudy Kadlub (@rudykadlub)இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரூடி காண்டல்ப், வட அமெரிக்க சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக அமைந்ததாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வெற்றிக்கு உதவிய பயிற்சியாளர்களுக்கு நன்றியும் கூறியுள்ளார். 71 வயதில் இப்படியொரு சாதனையா? என வியந்துள்ள நெட்டிசன்கள், ரூடியின் இந்த சாதனைக்கு தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். கடின உழைப்புக்கு வயது ஒரு தடை இல்லை என்பதை ரூடி காண்டல்ப் நிரூபித்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சர்வதேச பவர்லிப்டிங் விதிமுறைப்படி, ஒரே நாளில் 567 கிலோவை தூக்கி 4 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 

Also read... அமெரிக்க உணவகத்தில் 2020 டாலர்கள் டிப்ஸ் வைத்து 2020க்கு குட்பை சொன்ன வாடிக்கையாளர்: வைரலாகும் புகைப்படம்!

தனது 55 வது வயதில் பிட்னஸ் பயிற்சியை தொடங்கிய ரூடி, அதனை இடைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் விரைவிலேயே தொழில்முறை பவர்லிப்டராக மாறினார். தனது அயராத உழைப்பினால் இதுபோன்ற பல பட்டங்களையும் அவர் வென்றுள்ளார். இதேபோல் கடந்த டிசம்பரில், 7 வயதான ரோரி வான் உல்ப்ட் (Rory van Ulft) என்ற குழந்தை உலகிலேயே சக்தி வாய்ந்த குழந்தை என்ற பட்டத்தை தட்டிச் சென்றது. கனடாவைச் சேர்ந்த அந்தக் குழந்தை பள்ளியில் மூன்றாவது வகுப்பு படித்து வருகிறது.  இருப்பினும் வெயிட்லிப்டிங்கில் (weight lifting) டெட் லிப்ட் 80 கிலோ, ஸ்நாட்ச் 32 கிலோ (Snatch 32 kg), ஜெர்க் 42 கிலோ பிரிவில் (Jerk 42 kg) பங்கேற்று வெற்றி பெற்று அசத்தியது. 

குழந்தையின் இந்த சாதனை வெயிட்லிப்டிங் உலகில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 7 வயதாகும் ரோரி வான், இதுவரை 11 வயதுக்குட்பட்ட அமெரிக்க வெயிட்லிப்டிங் சாம்பியன் பட்டத்தையும், 13 வயதுக்குட்பட்டோருக்கான யூத் நேஷனல் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.  5 வயதில் இருந்து வெயிட்லிப்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் ரோரி வான், மருத்துவரின் ஆலோசனைப்படி உணவுகளை எடுத்துக்கொள்கிறார். தந்தையை ரோனி வானுக்கு வெயிட்லிப்டிங் பயிற்சியாளராக இருக்கிறார். ஜிம்னாஸ்டிக் துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாக ரோரி வான் கூறியுள்ளார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Trending