திருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...! - வைரல் வீடியோ

திருமணத்திற்குப் பின்னர் பிறந்த வீட்டை பிரிய அடம்... புதுப்பெண்ணை தூக்கிச் சென்ற மாப்பிள்ளை...! - வைரல் வீடியோ
  • News18
  • Last Updated: January 25, 2020, 4:11 PM IST
  • Share this:
திருமணமான பின்னர் பிறந்த வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்குச் செல்ல புதுப்பெண் அடம்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக திருமணமாகி பிறந்து வளர்ந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லும் பெண்களை சோகம் வாட்டும். தாய், தந்தையர், சகோதர சகோதரிகள், உற்றார் - உறவினர்கள் என சிறு வயதில் இருந்து பழகிய அனைத்தையும் விட்டுவிட்டு புதிதாக ஒரு இடத்திற்கு இடம்பெயர்வதே அந்த சோகத்திற்கு காரணம்.

இந்தியா முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அது அவர்களைப் பொருத்த வரை சோக நிகழ்வு..


இப்படியாக பேஸ்புக்கில் ஒரு வீடியோ வைரலாக பரவிவருகிறது. திருமணம் முடிந்து பிறந்த வீட்டில் இருந்து புறப்படும் மணப்பெண், சோகம் தாங்காமல் கதறி அழுதார். அழுகையை விடாமல் அங்கிருந்து நகராமல் இருக்க, மணமகன் பெண்ணை தனது கைகளால் தூக்கிச் செல்கிறார்.கணவர் தூக்கியபோதும் மணப்பெண் அழுகையை விடவில்லை.வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்க...
First published: January 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்