Home /News /trend /

வாரன் பஃபெட்டின் 90 பில்லியன் டாலர் சொத்தில் இருந்து உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் பங்கு.!

வாரன் பஃபெட்டின் 90 பில்லியன் டாலர் சொத்தில் இருந்து உலகின் ஒவ்வொரு குழந்தைக்கும் பங்கு.!

warren buffett

warren buffett

Warren Buffett | ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியுடன் வாரன் பஃபெட்டிற்கு 92 வயது நிறைவடைய இருக்கிறது.

    உலகின் முதன்மையான பணக்காரர்களில் ஒருவர் வாரன் பஃபெட். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், பெர்க்‌ஷைர் ஹதாவே நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் இவர் முதலீடு செய்து வைத்துள்ளார். கடந்த ஜூன் மாத நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர் ஆகும். உலகின் 5ஆவது பெரிய செல்வந்தராக இவர் அறியப்படுகிறார்.

    ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதியுடன் வாரன் பஃபெட்டிற்கு 92 வயது நிறைவடைய இருக்கிறது. கொடையுள்ளம் கொண்ட இவர் பல ஆண்டுகளாகவே பல்வேறு தொண்டு காரியங்களை செய்து வருகிறார். சிறுக, சிறுக உதவி செய்வது போதாது என்று நினைத்த இவர், கடந்த 2010ஆம் ஆண்டில் மிகப் பெரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

    அதாவது, தன்னுடைய இறப்பிற்கு பிறகு 99 சதவீத சொத்துக்கள் ஏழைகளுக்கு தானமாக அளிக்கப்படும் என்று வாரன் பஃபெட் அறிவித்தார். முன்னதாக, 2006ஆம் ஆண்டில் தன்னுடைய சொத்தில் 85 சதவீதத்தை தானம் செய்வதாக அவர் கூறியிருந்த நிலையில், அந்த சதவீதத்தை அவர் உயர்த்தினார். இதில், பெரும்பாலான தொகையை பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலமாக ஏழைகளுக்கு கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போது பெர்க்‌ஷைர் நிறுவனத்தில் வாரன் பஃபெட் கொண்டிருக்கும் பங்குகளின் மதிப்பு 90 பில்லியன் டாலர் ஆகும். இதில் 56 பில்லியன் டாலர் பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு சென்று விடும். வாரன் பஃபெட்டின் குடும்பத்தினர் நடத்தும் 4 அறக்கட்டளைகள் மூலமாக 17.4 பில்லியன் டாலர் தான காரியங்களுக்காக செலவிடப்பட உள்ளது. இது தவிர 18.7 பில்லியன் டாலர் பணம் எதற்கும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.



    10 ஆண்டுகளுக்குள் தானம் செய்ய இலக்கு

    வாரன் பஃபெட், தான் இறக்கும் நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்குள் அனைத்து தான, தர்ம நடவடிக்கைகளையும் முடித்துவிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, பில்கேட்ஸ் அறக்கட்டளை பணியாளர்கள், தங்களுக்கு நன்கொடையாக கிடைக்க இருக்கும் இவ்வளவு பெரிய பணத்தை எங்கு தானம் செய்வது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதில், ஒரு சிந்தனையாக உலக குழந்தைகள் சேமிப்பு வங்கியை தொடங்குவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. அதில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரக்கணக்கான டாலர்களை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    Also Read : 27 ஆண்டுகளாக ஒருமுறை கூட விடுப்பு எடுக்காத ஊழியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! 

    எந்தவித திட்டத்தையும் முன்வைக்காத வாரன் பஃபெட்

    இதற்கிடையே 92 வயதை எட்டும் வாரன் பஃபெட், தான் தானமாக அளிக்கப் போகும் சொத்துக்களை எங்கு, எப்படி செலவிட வேண்டும் என்ற தெளிவான திட்டங்களை இதுவரையிலும் அறிவிக்கவில்லை. அதே சமயம், இவரிடம் இருந்து பெறும் பணத்தை, பில்கேட்ஸ் அறக்கட்டளை தங்கள் திட்டப்படி பூமியில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு சேர்த்தது என்றால், அது குழந்தைகளின் சமூக, பொருளாதார மாற்றத்திற்கு வழிவகை செய்வதாக அமையும் என்று கருதப்படுகிறது. இன்றைய சூழலில், குழந்தைகளின் கல்வி பாதுகாப்பை உறுதி செய்ய முயற்சிக்கும் பெற்றோருக்கு அப்பணம் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
    Published by:Selvi M
    First published:

    Tags: Bill Gates, Trending

    அடுத்த செய்தி