Home /News /trend /

திருப்பூரில் கேரம் போர்டு... சேலத்தில் லுங்கி...! அடுத்த போலீஸ் ட்ரோன் வீடியோ

திருப்பூரில் கேரம் போர்டு... சேலத்தில் லுங்கி...! அடுத்த போலீஸ் ட்ரோன் வீடியோ

News 18

News 18

”திருப்பூரில் ஒருவர் கேரம் போர்டைக் கொண்டு தன்னை மறைத்த நிலையில், இங்கு கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து தன்னை மறைக்கிறார்”

  • News18
  • Last Updated :
    ஊரடங்கின் போது கூட்டமாக சேர்ந்து விளையாடியவர்கள் போலீசாரின் ட்ரோன் வீடியோவில் சிக்குவது தொடர்கதையாகியுள்ள நிலையில், சேலத்திலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் போலீசாரின் கண்காணிப்பு அதிகளவில் இருந்தாலும், புறநகர் பகுதிகளின் எல்லா இடங்களிலும் போலீசார் நேரில் சென்று கண்காணிக்க முடியவில்லை.

    இதற்காக ட்ரோன் கேமராவை பயன்படுத்தி வருகின்றனர். கும்பலாக சேர்ந்து சீட்டு விளையாடும் இளைஞர்கள், கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்... ஏன் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கூட சிக்கியுள்ளனர்.

    இந்த நிலையில், சமீபத்தில் திருப்பூரில் ட்ரோன் கேமரா மூலம் கேரம் போர்டு விளையாடிய இளைஞர்கள் சிக்க, அதில் ஒருவர் கேரம் போர்டைக் கொண்டு தன்னை மறைத்துக்கொள்வார். இந்த வீடியோ வைரலாக பரவியது.



    இந்த நிலையில், சேலத்திலும் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.



    திருப்பூரில் ஒருவர் கேரம் போர்டைக் கொண்டு தன்னை மறைத்த நிலையில், இங்கு கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்து தன்னை மறைக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.













    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published:

    Tags: Lockdown, Salem

    அடுத்த செய்தி