• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் பிளேவரில் சமோசா - வியக்க வைக்கும் வைரல் வீடியோ!

ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட் பிளேவரில் சமோசா - வியக்க வைக்கும் வைரல் வீடியோ!

ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட சமோசா

ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட சமோசா

இணையத்தில் தற்போது ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட சமோசா வைரலாகி வருகிறது.

  • Share this:
வினோதமான உணவு கலவைகளை பரிசோதிப்பது அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் பட்டர் சிக்கன் பானி பூரி மற்றும் மேகி மில்க் ஷேக் உள்ளிட்டவை ட்ரெண்டாகின. இந்நிலையில் இட்லி மற்றும் சாம்பார், சட்னியின் சுவையான காம்போ பேக் தற்போது வினோதமான உணவாக மாற்றப்பட்டு உள்ளது.

சட்னி மற்றும் சாம்பர் உள்ளிட்ட சைட் டிஷ்ஷில் இட்லியை நனைத்து சாப்பிடும் வகையில், பெங்களூரில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட்டில் ஐஸ்கிரீம் ஸ்டிக் இட்லி பரிமாறப்படுகிறது. இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஸ்ட்ராபெர்ரி மற்றும் சாக்லேட்டால் செய்யப்பட்ட சமோசா வைரலாகி வருகிறது.



இதுகுறித்த வீடியோவை தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா ஷேர் செய்துள்ளார். அதில் சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி என இரண்டு வகைகளில் சமோசா உள்ளது. அதனுள்ளே மசாலாக்கள் மற்றும் ஜாஸ் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 24,000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.







இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என கமெண்ட் செய்து வருகின்றனர். சாக்லேட் பிரியர்களுக்கு இந்த சமோசா ஒரு வரப்பிரசாதம் என்றும், இதனை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என இருப்பதாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். ஜிலேபி, கச்சோரியுடன் தற்போது இந்த சமோசாவும் எனக்கு பிடித்த உணவில் சேர்ந்துள்ளது என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். அதேநேரத்தில் இதுபோன்ற உணவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என ஒருவர் கோபமாகவும் கமெண்ட் செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: