Home /News /trend /

புகைப்படமா? வரைபடமா? நெட்டிசன்களை ஷாக்காக்கிய சென்னைப் பெண்ணின் ட்விட்டர் போஸ்ட்

புகைப்படமா? வரைபடமா? நெட்டிசன்களை ஷாக்காக்கிய சென்னைப் பெண்ணின் ட்விட்டர் போஸ்ட்

Maggi Art

Maggi Art

Trending Photo | சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரை கலக்கிய அதே சென்னை ஆர்ட்டிஸ்ட் இப்போது மீண்டும் தனது புதிய ட்விட் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.

நீங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்றால் பல வித்தியாசமான போட்டோக்கள் அடங்கிய போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். அதே நேரம் ஃபில்ட்டர் காபி இருக்கும் எளிய போட்டோ அடங்கிய போஸ்ட்டையும் பார்த்திருப்பார்கள்.

ஆனால் சில வாரங்களுக்கு முன் ஃபில்ட்டர் காபி அடங்கிய ஒரு ட்விட்டர்  பதிவு வைரலானது. இதற்கு காரணம் அது ரியல் ஃபில்ட்டர் காபியின் போட்டோ அல்ல. மிக அற்புதமான பெயிண்டிங் என்பது தான். அந்த போட்டோவை மேலோட்டமாக பார்த்த பலரும் சுட சுட ஆவி பார்க்கும் ஃபில்ட்டர் காபியை போட்டோ எடுத்து ஷேர் செய்யப்பட்டிருக்கிறது என்று கடந்து போயிருப்பார்கள். ஏனென்றால் அந்த அளவிற்கு மிக தத்ரூபமாக ரியல் ஃபில்ட்டர் காபியை போலவே இருந்தது பெயிண்டிங். இதை கூர்ந்து கவனித்து போட்டோவை ஜூம் செய்த பார்த்த பிறகே அது ஒரு ஓவியம் என்று பலருக்கும் புரிந்தது. இந்த பெயிண்டிங்கை செய்தவர் சென்னையை சேர்ந்த ஒரு ஆர்ட்டிஸ்ட் ஆவார்.

சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டரை கலக்கிய அதே சென்னை ஆர்ட்டிஸ்ட் இப்போது மீண்டும் தனது புதிய ட்விட் மூலம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார். இந்த முறை இவர் ஷேர் செய்து உள்ளது மேகி நூடுல்ஸ் பாக்கெட்டின் போட்டோ ஒன்றை. "எனது பழைய மேகி ஓவியம்"( my old painting of maggi ) என்ற கேப்ஷனின் கீழ் இந்த போஸ்ட்டை ஷேர் செய்து இருக்கிறார் அந்த ஆர்ட்டிஸ்ட்.

ஃபில்ட்டர் காபி பெயிண்டிங்கை போலவே இவர் சமீபத்தில் ஷேர் செய்துள்ள மேகி பெயிண்டிங்கும் மிகவும் தத்ரூபமாக ஒரிஜினல் நூடுல்ஸ் பாக்கெட்டை போட்டோவில் பார்ப்பது போன்ற லுக்கை கொடுக்கிறது. இந்த ஓவியம் பார்ப்பதற்கு மிகவும் கச்சிதமாக உண்மை மேகி பாக்கெட்டை போவே இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் வியந்தனர். சென்னையை சேர்ந்த 21 வயதான வருணா ஸ்ரீதர் என்ற இளம்பெண்ணே தனது டிஜிட்டல் கலை மூலம் நெட்டிசன்களை வசீகரித்து உள்ளார்.



இவரது இந்த மேகி பெயிண்ட் ஆர்ட் அப்படியே நாம் நேரில் பார்க்கும் மேகி பேக்கை போலவே இருகிறது என்று யூஸர்கள் பலரும் கமெண்ட்ஸில் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த மேகி போஸ்ட் இதுவரை 9,500-க்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும், 550-க்கும் மேற்பட்ட ரீட்வீட்ஸ்களையும் பெற்றுள்ளது.

Also Read : உங்கள் பர்சனாலிட்டியை விளக்கும் புகைப்படம்..

"இந்த படம் நிச்சயமாக எங்களின் இதயத்தை கவர்ந்துள்ளது. மேகி மீதான உங்கள் அன்பை எப்போதும் காட்டி கொண்டே இருங்கள்” என்று மேகி இந்தியா சென்னை ஆர்டிஸ்ட்டின் இந்த போஸ்ட்டிற்கு கமெண்ட்ஸ் செய்து உள்ளது. "சிறுவயதில் இருந்தே மேகி எனக்கு மிகவும் பிடித்த உணவு" என்று பெயிண்டிங்கை வரைந்த இளம்பெண் மேகி இந்தியாவிற்கு பதில் அளித்து உள்ளார். "முதல் பார்வையில், இது அசல் பேக் போல் தோன்றியது, ஆனால் பெரிதாக்கி பார்க்கும் போது தான் தெரிகிறது இந்த சூப்பரான ஓவியம்" என்று என ஒரு யூஸர் பாராட்டி உள்ளார்.



மற்றொரு யூஸர் குறிப்பிடுகையில் "நான் உங்களது ஃபில்ட்டர் காபியை பார்த்து வியந்ததை போலவே இதையும் பார்த்து மிகவும் வியப்படைகிறேன். உங்களது கலை நிச்சயம் அருமையானது, தலைசிறந்த படைப்பு மற்றும் பாராட்டுக்கு உரியது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மேகி பெயிண்டிங் ட்விட்டரில் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Maggi, Trending

அடுத்த செய்தி