• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • முன்னாள் காதலரை வருங்கால கணவர் முன் கட்டிப்பிடித்த மணப்பெண் - மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வீடியோ!

முன்னாள் காதலரை வருங்கால கணவர் முன் கட்டிப்பிடித்த மணப்பெண் - மாப்பிள்ளையின் ரியாக்ஷன் வீடியோ!

முன்னாள் காதலரை வருங்கால கணவர் முன் கட்டிப்பிடித்த மணப்பெண்

முன்னாள் காதலரை வருங்கால கணவர் முன் கட்டிப்பிடித்த மணப்பெண்

திருமண நாளில் ஏற்பட்ட எதிர்பாராத இந்த நிகழ்வு திருமணத்தை மட்டுமல்லாது இணையத்தையும் கலக்கி வருகிறது.

  • Share this:
இந்தோனேஷியாவில் மணமகனிடம் அனுமதி கேட்டு மணப்பெண் முன்னாள் காதலரை கட்டிப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

எல்லோருக்கும் கடந்த காலம் ஒன்று இருக்கும். அதில் காதல் போட்ட கீறல்களை நிச்சயம் பெரும்பாலானோர் கடந்து வந்திருப்பார்கள். காதலன் அல்லது காதலி எதிர்பாராத சூழலில் பிரிந்து செல்வது ஒரு கடிமான சூழல் என்றாலும், அதனை கடந்து வந்தபிறகு அவர்களை மீண்டும் சந்திக்கும் தருணம் விவரிக்க முடியாத மனத்தாங்கலை ஏற்படுத்தும். அந்த தருணம் உங்களின் திருமண மேடையாக இருந்தால்? சற்று யோசித்து பாருங்கள் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று?

பார்த்து பழகிய, பேசிய உங்களின் நினைவுகளை ஒரு சிறு புன்னகையில் உதிர்ப்பதை தவிர வேறென்ன செய்ய முடியும்?. அப்படியான ஒரு சந்திப்புதான் இந்தோனேஷியாவில் மணப்பெண் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது. மணக்கோலத்தில் இருக்கும் மணப்பெண்ணை வாழ்த்துவதற்கு, அந்த பெண்ணின் முன்னாள் காதலன் திருமணத்துக்கு சென்றுள்ளார். மண மகனும், பொண்ணும் திருமண மேடையில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்து பெற்றுக்கொண்டிருக்கும்போது, இவரும் அவர்களை வாழ்த்துவதற்கு மண மேடைக்கு சென்றார்.

அப்போது அவரைப் பார்த்து வியந்த மணப்பெண், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது, தன் கையை கொடுத்து வாழ்த்து சொல்ல முன் காதலன் முற்படும்போது, கையை கொடுக்க மறுக்கும் மணப்பெண், தன் வருங்கால கணவரை பார்கிறார். அவரிடம், ஒரே ஒரு முறை என் முன்னாள் காதலனை கட்டிப்பிடித்துக்கொள்ளவா? என வாய்விட்டு கேட்கிறார். மணப்பெண்ணின் அருகில் இருக்கும் மணமகனும் இதற்கு தன் சம்மதத்தை தெரிவிக்கிறார். மணமகனின் சம்மதம் கிடைத்தவுடன் மணப்பெண், தன் முன்னாள் காதலரை வாஞ்சையுடன் கட்டிப்பிடிக்கிறார்.



முன்னாள் காதலரும் நெருடலுடன், மணப்பெண்ணை கட்டியணைக்கிறார். பின்னர், மணமகனை கட்டி அணைக்கும், முன்னாள் காதலர் மனமாற அவர்களை வாழ்த்திவிட்டு செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. திருமண நாளில் ஏற்பட்ட எதிர்பாராத இந்த நிகழ்வு திருமணத்தை மட்டுமல்லாது இணையத்தையும் கலக்கி வருகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு வாழ்த்துகளையும், மணமகனின் செயலுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் சில நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியிலான கருத்துக்களையும் அள்ளி வீசியுள்ளனர். நெட்டிசன் ஒருவர், மணமகன் முழு மனதுடன் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அவர் செய்கை உணர்த்துகிறது எனக் கூறியுள்ளார். மற்றொருவர், முன்னாள் காதலர் மிகவும் பண்புடன் கையை கொடுத்து வாழ்த்து தெரிவிக்க முயன்றபோது, வருங்கால கணவரிடம் மணப்பெண் ஒப்புதல் வாங்கி முன்னாள் காதலரை கட்டியணைத்தது சரியில்லை எனக் கூறியுள்ளார். மற்றும் சிலர், அந்தப் பெண்ணை திருமணம் செய்த மணமகன் கவனமாக இருக்க வேண்டுமென்றும் அட்வைஸ் செய்துள்ளனர். அதேவேளையில், ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்த வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டது, அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட மணமகன் தான் என்பது கூடுதல் தகவல்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: