ப்ளூ வேல் சேலஞ்ச்-க்கு அடுத்தபடியாக வந்துள்ள ஸ்கல் பிரேக்கர்...! ஆபத்தான சேலஞ்ச்... உஷார்...!

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் எனப்படுவதன் அர்த்தம் மண்டையை உடைக்கும் சேலஞ்ச்.

ப்ளூ வேல் சேலஞ்ச்-க்கு அடுத்தபடியாக வந்துள்ள ஸ்கல் பிரேக்கர்...! ஆபத்தான சேலஞ்ச்... உஷார்...!
ஸ்கல் பிரேக்கர்
  • News18 Tamil
  • Last Updated: February 19, 2020, 11:04 AM IST
  • Share this:
இந்த வருடம் தொடங்கியது முதல் இணையத்தில் வரிசையாய் வண்டி கட்டி வந்து நிற்கின்றது சேலஞ்ச்கள். முதலில் #cerealchallenge இந்த வருடத்தின் முதல் சவாலாக டிக் டாக் செயலியில் வைரலாகி வந்தது.

பலரும் காலை உணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வந்தனர்.

 


வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இந்த சேலஞ்ச்க்கு பிறகு வந்தது ப்ரூம் சேலஞ்ச். இது பார்ப்பதற்கு விளையாட்டாக இருந்தாலும் விபத்துக்களை ஏற்படுத்தும் நோக்கில் அமையவில்லை.

பிப்ரவரி 10-ம் தேதி மட்டுமே துடைப்பங்கள் புவியீர்ப்பு விசைக்கு எதிராக நிற்கும் என ஒருவர் கிளப்பிய புரளியை நம்பிய நெட்டிசன்கள், துடைப்பம் சேலஞ்சை ஆரம்பித்து வைத்துவிட்டனர்.இந்த நிலையில், தற்போது ட்ரெண்டாகி வருகின்றது ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச். பார்ப்பதற்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கில் உள்ள இந்த சேலஞ்ச் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விளையாடப் பட்டு வருகின்றது.

ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச் எனப்படுவதன் அர்த்தம் மண்டையை உடைக்கும் சேலஞ்ச். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகம் பகிரப்படும் இந்த சவாலை 3 நபர்கள் கொண்டு செய்கின்றனர்.

வரிசையாக மூவர் நிற்க நடுவில் இருக்கும் நபர் குதிக்கும் பொழுது இடது புறம் மற்றும் வலது புறம் இருக்கும் நபர்கள் கால்களால் தட்டி விட வேண்டும்.

Also see...டிக் டாக்கில் ட்ரெண்டாகும் இந்த வருடத்திற்கான முதல் சேலஞ்ச்... இது எங்கபோய் முடியுமோ!

இதனால் நேரடியாக தரையில் விழும் நடுவில் இருக்கும் நபரின் தலையில் காயம் ஏற்பட நேரிடும். ஆபத்தினை அறியாமல் அனைவரும் இந்த சேலஞ்ச்சை செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக போலீசாரும் இது தொடர்பாக எச்சரிக்கை வீடியோவை வெளியிட்டுள்ளனர்.Also see... இது என்ன சின்னப் புள்ளத்தனம்? இணையத்தில் ட்ரெண்டாகும் ப்ரூம் சேலஞ்ச் !
First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading