முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / பாகிஸ்தானில் உள்ள தனது வீட்டை பார்க்க விரும்பிய இந்திய மூதாட்டி..வரவேற்ற பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் உள்ள தனது வீட்டை பார்க்க விரும்பிய இந்திய மூதாட்டி..வரவேற்ற பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சென்றுள்ள ரீனா ஷிபார்.

பாகிஸ்தான் சென்றுள்ள ரீனா ஷிபார்.

ரினா ஷிபார் என்ற 92 வயதான மூதாட்டி சிறு பருவத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற இடத்தில் வாழ்ந்தவர். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தடைந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியாவில் வசித்து வரும் ரினா ஷிபார் என்ற 92 வயதான மூதாட்டிக்கு சிறு பருவத்தில் தான் வாழ்த்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவாக இருத்தது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு தற்போது சனிக்கிழமை பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள பிரேம் நிவாஸ் என்ற இடத்தில் உள்ள தனது சிறு வயது வீட்டைப் பார்க்க அதிகாரப்பூர்வமாக வாகா அட்டாரி எல்லையைத் தாண்டி சென்றுள்ளார்.

ரினா ஷிபார் மற்றும் அவரது சகோதரியும், 1946ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒரு சில மாதத்திற்கு முன்பு இந்தியாவிற்கு வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்பு பிளவுப்பட்ட பாகிஸ்தானில் இருந்து அவரின் பெற்றோர்களும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இருபது ஆண்டுகள் கழித்து தனது நீண்ட நாள் கனவை நிறைவேற்ற முயற்சி எடுத்து 1965ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் சிறப்பு பாஸ்போர்ட்டை பெற்றார். ஆனால் அவரால் உடனடியாக செல்லமுடியவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் முகநூலில் இந்தியா-பாகிஸ்தான் பாரம்பரிய சங்கம் என்ற குழுவில் இணைந்துள்ளார். அதில் தான் பாகிஸ்தானில் உள்ள சிறுவயது வீட்டைப் பார்க்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அந்த குழுவில் சஜ்ஜாத் ஹுசைன் என்ற நபர் மூதாட்டிக்கு உதவி செய்த நிலையில் அவர் வாழ்த்த வீட்டைக் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நிலையில் மார்ச் 2022ல் விசாவிற்கு முயற்சி செய்த நிலையில் கிடைக்கவில்லை. மேலும் மே 2022ல் ‘சுதந்திர உருது’ என்ற செய்தி நிறுவனம் அவரை பற்றிய காணொளி செய்தியை வெளியிட்ட நிலையில் பாகிஸ்தான் உயர் ஆணையம் மூலம் மூதாட்டிக்கு விசா கிடைக்கப்பெற்றது.

இதனைப்பற்றி அவர் கூறுகையில், சிறு வயதில் நான் வாழ்த்த வீட்டைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும், தன் வாழ்நாள் முழுக்க தன் வீட்டையும், தான் வாழ்ந்த தெருவையும் பார்க்க விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் விசா பெறுவதற்கான முறைகளை எளிமைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Humanitarian, India and Pakistan