முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / துருக்கி நிலநடுக்கம்: 21 நாட்களுக்குப் பின் கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குதிரை- வீடியோ

துருக்கி நிலநடுக்கம்: 21 நாட்களுக்குப் பின் கட்டிட இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட குதிரை- வீடியோ

மீட்கப்பட்ட குதிரை

மீட்கப்பட்ட குதிரை

Turkey Earthquake viral video : துருக்கி நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட குதிரை 21 நாட்கள் கடந்து மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • international, IndiaTurkeyTurkey

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிட இடிப்பாடுகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டு தவித்த குதிரை, 21 நாட்களுக்குப் பின்பு உயிருடன் மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அன்று துருக்கி மற்றும் சிரியா நாடுகளை மையமாகக் கொண்டு நிகழ்ந்த கோர நிலநடுக்கம் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின. ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது.

துருக்கியில் 43,500 மேற்பட்டோர் மற்றும் சிரியாவில் 6,000க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 50,000க்கும் மேற்பட்டோர் இந்த கோர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் புணரமைப்பு பணிகளைத் துருக்கி அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பின் காரணமாக சுமார் 5.2 லட்சம் குடியிருப்புகளைக் கொண்ட 1.6 லட்சம் கட்டங்கள் சேதமடைந்து பாதிப்புகளைக் கண்டுள்ளது.

இந்த நிலையில், கட்டிடங்களில் இடிபாடுகளுக்கு நடுவில் குதிரை ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குதிரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 21 நாட்கள் கட்டிடக் குவியல்களுக்கு நடுவில் சிக்கி கொண்டு இருந்த குதிரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

Also Read : ஆடு, மாடு, கோழி போல மிமிக்ரி.. இணையத்தை கலக்கும் சாத்தூர் சிறுவன்!

குதிரையை மீட்கும் வீடியோவை ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் குழுவாக மக்கள் இணைந்து குதிரையை இடிபாடுகளுக்கு நடுவில் இருந்து மீட்டு எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

First published:

Tags: Turkey, Turkey Earthquake, Viral Video