Home /News /trend /

பெல்ஜியம் ஏர்போர்ட்டில் துள்ளிக்குதித்த ஆப்கன் சிறுமி... இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம்

பெல்ஜியம் ஏர்போர்ட்டில் துள்ளிக்குதித்த ஆப்கன் சிறுமி... இந்த வருடத்தின் சிறந்த புகைப்படம்

பெல்ஜியம் ஏர்போர்ட்டில் துள்ளிக்குதித்த ஆப்கன் சிறுமி

பெல்ஜியம் ஏர்போர்ட்டில் துள்ளிக்குதித்த ஆப்கன் சிறுமி

பெல்ஜியத்திற்கு சென்ற பிறகு ஒரு ஆப்கான் சிறுமி உற்சாகத்தில் தாவி செல்லும் ஃபோட்டோ தான் உலக மக்கள் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
பல வருடங்களுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு நிலவி வரும் நெருக்கடி நிலைகள் தொடர்பான பல்வேறு போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இன்டர்நெட் முழுவதும் நிரம்பி வழிகின்றன. ஏதோ உள்ளூர் பேருந்தில் ஏறுவது போல விமானத்தில் ஏற முயன்ற நூற்றுக்கணக்கான ஆப்கான் மக்கள் அடங்கிய வீடியோ காட்சிகள் மற்றும் விமானம் பறக்க துவங்கிய பிறகு அதிலிருந்து இருவர் கீழே விழுந்த காட்சிகள் என நம் கண்களையும், மனதையும் விட்டு அகல மறுக்கும் நெஞ்சை உலுக்கும் துரதிஷ்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. எப்படியோ தாலிபான்களின் ஆட்சிப்பிடியில் சிக்காமல் தப்பி பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் ஆப்கான் மக்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளிநாட்டிற்கு தப்பி சென்று வருகின்றனர்.

தாலிபான்கள் நாட்டை பிடித்த விரக்தியில் இருக்கும் அம்மக்கள் படும் அல்லல்கள் அடங்கிய காட்சிகள் சில வாரங்களாக நெட்டிசன்களை உலுக்கி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் இவ்வாறான கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இப்போது ஒரு ஆப்கான் சிறுமியின் ஃபோட்டோ ஒன்று உலகளவில் நெட்டிசன்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. தாலிபான்கள் நாட்டை கைப்பற்றி இருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி விமானம் மூலம் பெல்ஜியம் நாட்டிற்கு சில ஆப்கானியர்கள் சென்று இருக்கிறார்கள்.

Also Read : 6 அறுவை சிகிச்சை, 9 வருடமாக தொடரும் துயரம் - தாலிபான் தாக்குதல் குறித்து மலாலா உருக்கம்

அப்படி நாட்டிலிருந்து தப்பி பெல்ஜியத்திற்கு சென்ற பிறகு விமானத்தில் இருந்து இறங்கிய ஒரு ஆப்கான் சிறுமி அந்நாட்டின் ஏர்போர்ட்டினுள் இருக்கும் தார் சாலையில் சாதாரணமாக நடந்து செல்லாமல், உற்சாகத்தில் தனது வயதிற்குரிய விளையாட்டுத்தனத்துடன் தாவி செல்லும் ஃபோட்டோ தான் உலக மக்கள் அனைவரையும் தற்போது கவர்ந்துள்ளது.நெட்டிசன்கள் உள்ளிட்ட பலரை கவர்ந்துள்ள இந்த போட்டோவை மெல்ஸ்ப்ரோக் ராணுவ விமான நிலையத்தில் வைத்து ராய்ட்டர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜோஹன்னா ஜெரான் எடுத்து உள்ளார். இந்த ஃபோட்டோ அந்த சிறுமி தனது முகத்தில் புன்னகையுடன் இருப்பதை காட்டுகிறது. அவள் தாவி செல்வது போல இருக்கும் குறிப்பிட்ட ஃபோட்டோவில் அந்த சிறுமிக்கு முன்னே ஒரு ஆண் முதுகில் லக்கேஜ் பேக் மாட்டி கொண்டு ஒரு கையில் வேறு ஒரு பேக், மற்றொரு கையில் சிறிய குழந்தை ஒன்றை கையில் பிடித்து கொண்டு நடக்கிறார்.அவருக்கு பின்னால் செல்லும் பெண்மணி ஒருவர் முதுகில் லக்கேஜ் பேக் மாட்டி கொண்டு நடந்து செல்கிறார். இந்த இருவருக்கும் பின்னால் முகத்தில் சிரிப்பு மற்றும் உற்சாகத்தோடு தாவி குதித்து கொண்டே கையில் ஒரு சிறிய பேக்கை எடுத்து கொண்டு பெல்ஜியத்திற்குள் நுழைகிறாள் அந்த சிறுமி. அநேகமாக முன்னே செல்லும் இருவரும் அவரது பெற்றோராக இருக்க கூடும். இந்த ஃபோட்டோவில் காணப்படும் பெரியவர்கள் மற்றும் குழந்தையின் முகங்களில் உள்ள எக்ஸ்பிரஷன் உண்மையில் நம் அனைவரையுமே ஒரு நொடி வியக்க வைக்கிறது.

Also Read : 6 அறுவை சிகிச்சை, 9 வருடமாக தொடரும் துயரம் - தாலிபான் தாக்குதல் குறித்து மலாலா உருக்கம்

இந்த தனித்துவமான போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள முன்னாள் பெல்ஜிய பிரதமர் Guy Verhofstadt, "அகதிகளை நீங்கள் பாதுகாக்கும் போது இதுதான் நடக்கும், சிறுமியே உன்னை பெல்ஜியத்திற்கு வரவேற்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த ஃபோட்டோ உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களிடம் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் பெல்ஜியத்தில் இந்த சிறுமிக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்றும், சிறந்த மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அந்த சிறுமியை வாழ்த்தி உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published:

Tags: Afganistan, Taliban, Viral

அடுத்த செய்தி