ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ட்ரைவிங் செய்தபடி சாலையைக் கடந்த நாய்.. வைரல் வீடியோ!

ட்ரைவிங் செய்தபடி சாலையைக் கடந்த நாய்.. வைரல் வீடியோ!

ட்ரைவிங் செய்தபடி சாலையைக் கடந்த நாய்.

ட்ரைவிங் செய்தபடி சாலையைக் கடந்த நாய்.

நாய் ஒன்று ஒரு சிறிய காரை ஓட்டிச்சென்ற படி நடைபாதையை கடந்த சென்ற வீடியோ வைரலாக பரவியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாய்கள் எப்போதும் நன்றி உள்ளவை, திறமையானவை மற்றும் தனது எஜமானிக்கு விசுவாசமானவை. நாய் போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு அது ஒரு குழந்தை போன்றது. மேலும், அவை செய்யும் வித்தியமான செய்கைகளை தற்போது வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவை தங்கள் எஜமானர்கள் சொல்வதை கேட்டு அதன்படி நடந்து கொள்வதை பார்க்கும் போது மிகவும் ஆசையாக இருக்கும்.

பொதுவாக நாய்கள் சில அசாத்திய திறமைகளை கொண்டுள்ளன என்பது ஆச்சர்யமான ஒன்று. அந்த வகையில் நாய் கார் ஒட்டிச் செல்லும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. நாய் ஒன்று ஒரு சிறிய காரை ஓட்டிச்சென்ற படி நடைபாதையை கடந்த சென்ற வீடியோ வைரலாக பரவியுள்ளது.

நியூயார்க் போஸ்ட் சமீபத்தில் இது தொடர்பான ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில், மிகவும் பிஸியான ரோட்டில் ரெட் சிக்னல் போடப்பட்டிருந்தது. அப்போது நடைபாதையை சிலர் கிராஸ் செய்து கொண்டிருந்தனர். எதிர்பாராத வகையில் ஒரு நாய் ஒன்று மினி காரை ஒட்டி சென்றது. தங்க நிறத்தில் முடிகளை கொண்ட பொமரேனியன் நாய், ஒரு பளபளப்பான கருப்பு மினியேச்சர் காரை ஓட்டி சென்றது. இந்த அற்புதமான காட்சியை கண்ட நடைபாதை வழிப்போக்கர்கள் திரும்பி நின்று அதனை ரசித்தனர்.

இந்த ஆடம்பரமான பொமரேனியன் கீ வெஸ்டின் டுவால் தெருவில் ஒரு சிறிய நடைபாதையில் ஒரு பிரபலம் போன்று பயணம் செய்த போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. கீ வெஸ்ட் என்பது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒரு தீவு நகரம் ஆகும். அந்த நாய் ஒட்டிய கார் ஒரு ரிமோட் கண்ட்ரோல் கார் ஆகும். அதனை எப்படி ஓட்டுவது என்று நாய்க்கு நாங்கள் பயிற்சி அளித்தோம் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்தார். மேலும், இந்த நாய் காரை டிரைவ் செய்வது இது ஒன்றும் முதல் முறை அல்ல. ஏற்கனவே இதுபோன்று எங்கள் நாய் வாகனத்தை ஒட்டியுள்ளது என தெரிவித்தார்.

Also read: Gold Rate | டிசம்பர் மாத தொடக்கத்தில் உயரும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

வீதியில் நாய் காரை ஓட்டுவதை கண்ட ஒரு பார்வையாளர் சிறிய நாய் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது என்று கருத்து தெரிவித்துள்ளார். இது ஒரு தனித்துவமான சம்பவமாகத் தோன்றினாலும், உண்மையில் இது போன்ற நிகழ்வு முன்னதாக நடந்துள்ளது. செல்லப்பிராணிகளை வளர்க்கும் நபர்களை போன்று அவைகளும் சில நடவடிக்கையில் ஈடுபடுவதால் அதனை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அந்த வீடியோக்கள் நெட்டிசன்களால் அதிகம் விரும்பப்படுவதால், மக்கள் தங்கள் செல்லப்பிராணிகள் ரிமோட் கண்ட்ரோல் கார்களை ஓட்டுவதை படமாக்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு யூடியூப் பயனர் சான் டியாகோவின் தெருக்களில் ஒரு பொன்னிற பொமரேனிய சில்வர் நிற சொகுசு காரை ஓட்டும் வீடியோவைப் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, ஆலிவர் என்று பெயரிடப்பட்ட கோர்கி வகை நாய் தனது உபெர்-கூல் பிங்க் போர்ஷுக்கு வைரலானது. இது சான் லூயிஸ் ஒபிஸ்போ நகரத்தை சுற்றி காரை ஒட்டி வந்தது. 7 வயதான நாய் தனது சுறுசுறுப்பான டிரைவிங்க்காக பல ஊடகங்களில் வைரலானது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Trending, Viral Video